India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஸ்ரீவி.ஆண்டாள் கோயிலில் கடந்த 2016-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடந்த நாளில் ஆண்டுதோறும் வர வருஷாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு வருஷாபிஷேக விழா இன்று யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. ஆண்டாள் கோயில் முன் உள்ள யாகசாலை மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நாளை 108 கலச திருமஞ்சனமும்,நாளை மறுநாள் லட்சார்ச்சனையும் நடைபெற உள்ளது.

கடந்த 2006 – 2011 தி.மு.க.ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக அமைச்சர்கள் தங்கம்தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் மீதான வழக்கு ஸ்ரீவி.முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான வழக்கின் வாய்தா நேற்று இருந்த நிலையில்,உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தடை காரணமாக வழக்கின் விசாரணையை மார்ச் 7க்கு முதன்மை மாவட்ட நீதிபதி ஒத்திவைத்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் சுகாதாரத்துறை மூலம் மகப்பேறு இறப்பு, குழந்தை இறப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதோடு ஆட்சியர் அலுவலகத்தில் தாய்சேய் நல கண்காணிப்பு மையம் நிறுவப்பட்டுள்ளது. மேலும் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிகள் பிரசவிக்கும் வரை கண்காணிக்கப்படுகின்றனர். மகப்பேறு தொடர்பாக சந்தேகங்களுக்கு 93454 92726, 93454 97705 இல் தொடர்பு கொள்ளலாம்.

விருதுநகர் சத்திரப்பட்டிஅருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி .இவர் சமுசிகாபுரம் மெயின்ரோட்டில் இரவு நடந்து சென்றபோது அவ்வழியே டூ வீலரில் வந்த வாலிபர் செல்லும் வழியில் இறக்கி விடுவதாக கூறி காட்டுப்பகுதிக்கு சென்று மூதாட்டியை பாலியல் வன்புணர்வு செய்ததுடன் வெளியே சொல்லக்கூடாது என மிரட்டினார். கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் சுந்தர் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் பிப்.10 தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு மாவட்டத்தில் 7 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க மாவட்ட சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. மேலும் அங்கன்வாடி மைய பணியாளர்கள் மூலம் 1 முதல் 30 வயது வரை உள்ளோருக்கு 7.12 லட்சம் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

அரசு,அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட ,மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://umis.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மீன் உற்பத்தியை பெருக்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மீன் குஞ்சு வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதில் விருதுநகர் மாவட்டத்திற்கு 400 எக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 53 கண்மாய்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில் 18.9.24 முதல் 18.12.24 வரை 8 லட்சம் மீன் குஞ்சுகள் வளர்த்து விற்பனை செய்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நிறைவு செய்து மாநில அளவில் சாதனை படைத்துள்ளது

ஸ்ரீவி.பகுதியைச் சேர்ந்த 2 சிறுவர்களை திவ்யா என்ற யூடியூபர் பாலியல் தொல்லை கொடுத்து அதனை படம்பிடித்து அதன் மூலம் பணம் திரட்ட முயற்சித்ததாக திவ்யா,சித்ரா,ஆனந்தராமன், கார்த்திக் ஆகிய 4 பேரை ஸ்ரீவி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதில் சித்ராவின் ஜாமின் மனு மீதான விசாரணை ஸ்ரீவி.போக்சோ நீதிமன்றத்தில் பிப்.8 அன்று நடைபெற உள்ளது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வள்ளலார் நினைவு தினமான வரும் 11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று அனைத்து டாஸ்மாக் மதுபான விற்பனை கடைகள் மற்றும் மதுபான உரிமை ஸ்தலங்களை தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே சட்ட விரோதமாக மது விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், புல்வாய்க்கரை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நேற்று மதியம் சத்துணவு சாப்பிட்ட 14 மாணவ மாணவியர்களுக்கு வயிற்று வலியும் வாந்தியும் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில் சத்துணவு உதவியாளர் கருப்பாயி என்பவரை தற்காலிக பணிநீக்கம் செய்து விருதுநகர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.