India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விருதுநகர் மாவட்டத்தில் வள்ளலார் தினத்தை முன்னிட்டு இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடுவதற்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக காவல்துறையினர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளனர்.

சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து பாதுகாப்பான சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல் குறித்து கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் துவக்கி வைத்தார். இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினர் இணையத்தில் தங்களது நேரங்களை வீணடிப்பதாக தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் 51,464 விவசாயிகள் பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். மேலும் விவசாயிகள் பயனடைய விவசாயிகளின் தரவுகள் சேகரிக்க கிராமங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது. இப்பணிக்காக 601 கிராமங்களில் ஊராட்சி அலுவலகத்தில் இன்று (பிப்.10) முதல் 10 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. விவசாயிகள் தங்களது தரவுகளை முகாமில் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சிவகாசி அருகே எம்.ராமச்சந்திரா புரத்தைச் சேர்ந்தவர் சின்னமாரி (40), அதே பகுதியைச் சேர்ந்த மாரிச்செல்வம் தமிழ்செல்வம் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல் மணல் திருட்டில் ஈடுபடுவதை காவல்துறையினரிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன்பகை காரணமாக 4பேர் கொண்ட கும்பல் சின்னமாரியிடம் தகராறில் ஈடுபட்டு அவரை கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். அவரது புகாரில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மினி பேருந்துக்கான புதிய விரிவான திட்டம் உடனடியாக அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் மினி பேருந்துக்கான கட்டண திருத்தம் மே.1 முதல் நடைமுறைக்கு வருகிறது. எனவே விருதுநகர் மாவட்டத்தில் மினி பேருந்து புதிய விரிவான திட்டதின் கீழ் வழித்தட வரைபடங்களுடன் கூடிய விவரங்களை தனியார் அமைப்பு, பேருந்து, மினி பேருந்து உரிமையாளர்கள் அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலரிடம் பிப்.10க்குள் சமர்ப்பிக்கலாம்.

சிவகாசி அருகே கொங்கலாபுரம் பகுதியில் போலீசார் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு குறித்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள ரவீந்திரா பட்டாசு ஆலைக்கு அருகே உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்ட கட்டிடத்தில் வைத்து சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்தது தெரிய வந்தது. இதையடுத்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட காசி என்பவரை கைது செய்த போலீசார் ரூ.60,000 மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

அருப்புக்கோட்டை அருகே கட்ட கஞ்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(38). ஆடு, மாடுகள் மேய்க்கும் தொழில் செய்து வந்த செந்தில்குமார் பிள்ளையார் ஊரணி அருகே ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்த போது அவரது காலில் விஷப்பாம்பு கடித்துள்ளது. அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செந்தில்குமார் உயிரிழந்தார். தாலுகா போலீசார் இது குறித்து நேற்று (பிப்.9) வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சிவகாசி ஆயுதப்படை அலுவலகத்தில் போலீசாருக்கான சிறப்பு கண் சிகிச்சை முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை மாவட்ட எஸ்பி கண்ணன் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் போலீசாருக்கு கிட்டப்பார்வை, தூரப்பார்வை மற்றும் கண்கள் சம்பந்தமான குறைபாடுகள் குறித்து பரிசோதிக்கப்பட்டது. இதில் டாக்டர் அணில் குமார் தலைமையிலான மருத்துவர் குழுவினர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்தனர்.

விருதுநகர் சாத்தூர் பகுதியிலிருந்து வேன் ஒன்றில் 16 பேர், நேற்று மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சாலிசந்தை பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். பேரையூர் அருகே தம்பிபட்டி-சாலிசந்தை சாலையில் சென்றபோது எதிர்பாராத விதமாக வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் வேனில் பயணம் செய்த 16 பேர் காயமடைந்து விருதுநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று(பிப்-8) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் காவலர்கள் உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் இதில் குறிப்பிட்டுள்ள அலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.