India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் இந்திய முழுவதும் காலியாக உள்ள 348 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த இதற்கு 18 வயது முதல் 30 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் <

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த வரிக்கல் கிராம நிர்வாக அலுவலர் தேவராஜ் என்பவர் பட்டா மாற்றம் செய்வதற்காக ரூபாய் 10,000 லட்சம் கேட்டுள்ளார். அவர் லஞ்சம் வாங்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கிராம நிர்வாக அலுவலர் தேவராஜை கையும் களவுமாக பிடித்து, செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துத் தரப்படும் என வேளாண்மைத்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களுடன் உங்கள் அருகே உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாகச் சென்று விண்ணப்பிக்கலாம். அல்லது https://tnhorticulture tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணைப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மக்களே, அக்.1 முதல் மத்திய அரசு 5 – 17 வயது உள்ள குழந்தைகளுக்கு ஆதாரில் கை விரல் & கண் விழி பதிவை அப்டேட் செய்வது (BIOMETRIC) கட்டாயம் என அறிவுறுத்தியுள்ளது. இதற்கு கட்டணம் எதும் இல்லை இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். வரும் காலங்களில் ஆதார்தான் அனைத்திற்கும் தேவையாக இருக்கும். எனவே, உடனடியாக ஆதார் மையங்களுக்கு சென்று UPDATE பண்ணுங்க. இந்த தகவலை பெற்றோர்களுக்கு SHARE பண்ணுங்க.

நெய்வேலி நிலக்கரி நிலையத்தில் அப்ரெண்ட்ஸ் பணிக்கு 1,101 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ITI, பார்மசி, வணிகம், CS, நர்சிங் பட்டப் படிப்புகள் முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். உதவித்தொகையாக ரூ.12,524 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <

வானூர் பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரியில் 28.36 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பீடு ஏற்படுத்தியதாக பொன்முடி மீது தொடரப்பட்ட வழக்கு நேற்று (அக்.8) விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பு சாட்சிகளின் விசாரணை முடிந்த நிலையில், பொன்முடி & குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேரும் நவம்பர் 11ஆம் தேதி ஆஜராக நீதிபதி மணிமொழி உத்தரவிட்டுள்ளார்.

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கவும். உங்கள் பணம் மீட்டு தரப்படும். அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். (SHARE)

விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகளும் இணைந்து நடத்தும் மாபெரும் கல்விக்கடன் மேளா நாளை (அக்டோபர் 10) விழுப்புரத்தில் உள்ள E.S.பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்த கல்விக்கடன் மேளாவில் மாணவர்கள் கலந்துகொண்டு தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து கல்விக்கடனை பெற்று பயன்பெறுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரகுமான் கேட்டுகொண்டுள்ளார்.

சென்னையை சேர்ந்த பெண் நாகர்கோவில்-தாம்பரம் செல்லும் ரயிலில் பயணித்து கொண்டிருந்தார். நேற்று காலை 1:40 மணிக்கு ரயில், விழுப்புரம் நிலையம் அருகே வந்தபோது, அதே பெட்டியில் மேல் படுக்கையில் பயணித்த விக்னேஷ் (25) அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். அதனால் அப்பெண் கூச்சலிட்டுள்ளார். ரயில்வே பெண் தலைமை காவலரிடம் அப்பெண் புகார் அளித்தார். இதன்படி, போலீசார் வழக்குப் பதிந்து விக்னேஷை கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (அக்.09) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 1.அரசு உயர்நிலைப்பள்ளி வளாகம், கோணை 2.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகம், பிடாகம் 3.ஸ்ரீ மகாலட்சுமி மஹால், கல்யாணம்பூண்டி 4.கிராம சேவை மைய கட்டிடம், தீவனூர் 5.KRJ திருமண மஹால், மடப்பட்டு 6.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகம், தி.நெற்குணம் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது. ஷேர்!
Sorry, no posts matched your criteria.