Villupuram

News January 9, 2026

விழுப்புரம்: மருத்துவ அவசரமா? WhatsApp-ல் தீர்வு!

image

விழுப்புரம் மக்களே.. தலைவலி, காய்ச்சல், தீக்காயம், உடல்நல அறிகுறிகள் உட்பட அனைத்து கேள்விகளுக்கும் உங்க WhatsApp-லேயே தீர்வு காண முடியும்.<> ஆகஸ்ட் AI-<<>>யை பயன்படுத்தி புகைப்படமாகவோ, கேள்வியாகவோ பதிவிட்டு முதலுதவி பெறலாம். இந்த AI மூலம், உட்கொள்ள வேண்டிய மருந்துகள், அணுக வேண்டிய மருத்துவர்கள் மற்றும் பல விவரங்களை தமிழிலேயே தெரிந்துள்ளளலாம். 24×7 இயங்கும் இந்த AI-யை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 9, 2026

விழுப்புரம்: சமத்துவ பொங்கல் – ஆட்சியர் ஆய்வு கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பொங்கல் திருவிழா 2026 முன்னிட்டு சமத்துவ பொங்கல் கொண்டாடுவது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நேற்று (8.01.2026) நடைபெற்றது. இதில் அரசு அலுவலர்கள் பெரும்பான்மையாக பங்கேற்றனர்.

News January 9, 2026

விழுப்புரத்தில் 250 கோழிகள் இலவசம்!

image

விழுப்புரம் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News January 9, 2026

விழுப்புரம்: இன்றைய இறைச்சி விலை நிலவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஜன.9) சந்தை நிலவரப்படி, நாட்டுக்கோழி ஒரு கிலோ 400 ரூபாய், பிராய்லர் கோழி 190 ரூபாய், ஆட்டுக்கறி ஒரு கிலோ 760 ரூபாய் என விற்பனையாகிறது. மீன் வகைகளில், சிறிய வஞ்சிரம் ஒரு கிலோ 760 ரூபாய், வவால் மீன் ஒரு கிலோ 1600 ரூபாய் வரை விற்பனையாகிறது. இந்த விலை நிலவரம் உள்ளூர் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாறுபடும்.

News January 9, 2026

பொங்கல் பரிசு – குறை இருந்தால் புகார் தெரிவிக்கலாம்

image

விழுப்புரம்: பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கலில் குறை இருந்தால் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அப்துல் ரகுமான் அறிவித்துள்ளார். இந்த மாதம் 8ஆம் தேதியிலிருந்து பொங்களுக்கு முன்னரே முழுமையாக பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் ஏதாவது குறை இருந்தால் 04146223264 என்ற எண்ணுக்கு தெரிவிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News January 9, 2026

பொங்கல் பரிசு – குறை இருந்தால் புகார் தெரிவிக்கலாம்

image

விழுப்புரம்: பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கலில் குறை இருந்தால் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அப்துல் ரகுமான் அறிவித்துள்ளார். இந்த மாதம் 8ஆம் தேதியிலிருந்து பொங்களுக்கு முன்னரே முழுமையாக பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் ஏதாவது குறை இருந்தால் 04146223264 என்ற எண்ணுக்கு தெரிவிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News January 9, 2026

விழுப்புரத்தில் அதிர்ச்சி.. வீடு புகுந்து கொள்ளை!

image

விழுப்புரம்: குயவன்காடுவெட்டியைச் சேர்ந்தவர் பவுனம்பாள் (70). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டாமல், அதே பகுதியில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 6 பவுன் நகைகள் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதன் விலை ரூ.5 லட்சமாகும். இதுகுறித்த புகாரில், மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

News January 9, 2026

விழுப்புரம்: சிலிண்டர் மானியம் – ஒரே ஒரு SMS போதும்!

image

உங்களுக்கு கேஸ் சிலிண்டர் மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

News January 9, 2026

விழுப்புரத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட பகுதிகளில் நாளை (ஜன.10) கன மழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜன-11 அன்றும் மழை இருக்குமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே நாளை விழுப்புரம் மாவட்டத்தில் பரவலான மழையை எதிர்பார்க்கலாம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News January 9, 2026

விழுப்புரம்: விஜய்க்கு பேனர்-தவெக நிர்வாகிக்கு வழக்கு!

image

விழுப்புரம்: நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்யின் ஜன நாயகன் படம் வெளியாகவுள்ள நிலையில், விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் தவெக-வினர் அனுமதியின்றி பேனர் வைத்துள்ளனர். இந்நிலையில், பேனர் வைத்த தவெக பிரமுகர் ஹரி கிருஷ்ணன் மீது நேற்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!