Villupuram

News January 11, 2026

விழுப்புரம்: தாயை தாக்கிய கொடூர மகன்!

image

வடநெற்குணத்தை சேர்ந்த காளியம்மாள் (77) தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது 2வது மகன் ரங்கநாதன் (44), அடிக்கடி மதுகுடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதேபோல் நேற்று முன்தினம் பணம் கேட்டபோது, காளியம்மாள் இல்லை எனக் கூறியதால், தாய் என்றும் பாராமல் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் காளியம்மாள் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர், ரங்கநாதனை நேற்று போலீசார் கைது செய்தனர்.

News January 11, 2026

விழுப்புரம்: இன்றைய இறைச்சி விலை நிலவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஜன.11) ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு இறைச்சி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி நாட்டுக்கோழி ஒரு கிலோ 400 ரூபாய், பிராய்லர் கோழி 190 ரூபாய், ஆட்டுக்கறி ஒரு கிலோ 760 ரூபாய் என விற்பனையாகிறது. மீன் வகைகளில், சிறிய வஞ்சிரம் ஒரு கிலோ 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிலவரம் உள்ளூர் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாறுபடும்.

News January 11, 2026

விழுப்புரம்: புதிய TRACTOR வாங்க 80% மானியம்!

image

விழுப்புரத்தில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு <>இங்கு க்ளிக்<<>> செய்யலாம் அல்லது வேளாண் துறை அலுவலகத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம். SHARE NOW!

விழுப்புரம் மாவட்டத்திற்கு ALERT!

image

தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட பகுதிகளில் இன்று (ஜன.11) கன மழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்ட பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியே செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்!

News January 11, 2026

விழுப்புரம்: கம்பிகளை ஏற்றிவந்த வேன் நடுரோட்டில் கவிழ்ந்தது!

image

விழுதுபுரம்: புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு, கம்பிகளை ஏற்றிக்கொண்டு பொலிரோ வேன் நேற்று வந்துகொண்டிருந்தது. வேனை இப்ராஹிம் (29) ஓட்டிவந்துள்ளார். அப்போது, சின்னமுதலியார்சாவடி சந்திப்பில் திரும்ப முயன்றபோது, பின்னல் வந்த மற்றொரு வேன் பொலிரோ மீது மோதி, ஒரு பெண் ஓட்டிவந்த பைக் மீதும் மோதியது. இதில், கம்பிகளை ஏற்றிவந்த வேன் நடுரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News January 11, 2026

விழுப்புரம்: திருமண நாளன்று இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

image

விழுப்புரம்: மகாராஜபுரத்தை சேர்ந்த டேவிட், அதேபகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார். இவருடைய மகன் ஜோப் ஜெசூரன் (32). இவர் தனது திருமண நாளான நேற்று, பைக்கில் விழுப்புரம் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். தொடர்ந்து மருத்துவமனை அழைத்துச் செல்லும் பாதி வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 11, 2026

விழுப்புரம் இரவு ரோந்துப் பணி விவரம்

image

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்

error: Content is protected !!