India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் அடுத்த பானாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதரன். இவரது மகள் தரணி (16) விழுப்புரத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 14ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் நேற்று (மார்ச் 16) வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதன் காரணமாக, பிரதி வாரம் திங்கட்கிழமை அன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டமானது மறு தேதி அறிவிக்கும் வரை ரத்து செய்யப்படுவதாக, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி நேற்று (மார்ச் 16) அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் வீராமூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (57), தையல் கலைஞர். இவர் சிறுவந்தாடு அடுத்துள்ள மோட்சகுளம் பகுதியில் உள்ள அக்னி குளம் அருகே கரும்பு தோட்டத்தில் கை, தலை, காது, மூக்கு உள்ளிட்ட இடங்களில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் நேற்று (மார் 16) இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து வளவனூர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் 2024 நாடாளுமன்ற பொது தேர்தலுக்காக மொத்தம் 1966 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிக்காக 12095 அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடிகளில் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் மாவட்டத்தில் 113 பதற்றமான வாக்குச்சாவடிகள் இருப்பதாகவும், மொத்தம் 16,69,577 வாக்காளர்கள் உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மானூர் கிராமத்தில் நேற்று (மார்ச்.16) இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மரக்காணம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் தென்களவாய் பழனி இல்லங்கள் தோறும் திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்களை கூறி துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில் ஏராளமான ஒன்றிய மாவட்ட கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
கண்டாச்சிபுரம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வஜ்ரவேல் (42). இவர் நேற்று (மார்ச் 15) திருவண்ணாமலையில் இருந்து கண்டாச்சிபுரத்திற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையில் வழுக்கி விபத்துகுள்ளானது. இதில் படுகாயமடைந்த வஜ்ரவேல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் காலியாக உள்ள 31 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-37. கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, https://cra.tn.gov.in/-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.