Villupuram

News March 19, 2024

முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு 25ஆம் தேதி ஒத்திவைப்பு

image

விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், வானூர் அடுத்த பூத்துறை கிராமத்தில், செம்மண் குவாரியில் விதிகளை மீறி அதிக அளவில் செம்மண் அள்ளியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கெளதமசிகாமணி எம்பி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (மார்ச் 18) நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து வழக்கினை வரும் 25ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

News March 19, 2024

விழுப்புரத்திற்கு மத்திய பாதுகாப்பு படையினர் வருகை

image

மக்களவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் வகையில், டிஎஸ்பி ரவாத் தலைமையில், காவல் ஆய்வாளா் ஜெகதீஷ் மற்றும் 89 போலீஸாா் கொண்ட மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை குழுவினா் நேற்று (மார்ச் 18) விழுப்புரத்துக்கு வந்தனா். இவா்கள், காகுப்பத்திலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

News March 19, 2024

விழுப்புரம்: பாஜக – பாமக இடையே கையெழுத்து

image

பாஜக-பாமக இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் இன்று (மார்ச் 19) காலை கையெழுத்தானது. பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் விழுப்புரம், தைலாபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி விழுப்புரத்தில் பாமக போட்டியிடும் எனக் கூறப்படுகிறது.

News March 19, 2024

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

image

விக்கிரவாண்டி அடுத்த திருநந்திபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்ற முதியவர் நேற்று (மார்ச் 18) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து, பலமுறை பட்டா மாற்றம் செய்ய மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறினார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் முதியவரை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

News March 18, 2024

விழுப்புரம்: மனுக்களை பெட்டியில் செலுத்தலாம்

image

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம், விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் உள்ளிட்ட அனைத்து முகாம்கள் மற்றும் கூட்டங்கள் எதுவும் நடைபெறாது என விழுப்புரம் ஆட்சியர் பழனி நேற்று அறிவித்தார். எனவே பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள பெட்டியில் செலுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 18, 2024

விழுப்புரம்: உதவியவர்க்கு ஏற்பட்ட அவலம்!

image

விழுப்புரம் ஜானகிபுரம் மேம்பாலத்தில் இன்று அதிகாலை, கண்டெயினர் லாரி விபத்தில் சிக்கியது. இதில் ஓட்டுநர் அந்தரத்தில் தொங்கினார். அப்போது, அவருக்கு உதவுவதற்காக சென்னை நோக்கி அரசு பேருந்தில் பயணம் செய்த கோவையை சேர்ந்த முரளி சங்கர் என்ற வாலிபர் இறங்கி சென்று உதவ சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வந்து பேருந்தில் பார்த்தபோது முரளி வைத்திருந்த லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் திருடு போயிருந்தது.

News March 18, 2024

மரக்காணம்: தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு!

image

மரக்காணம் நடுகுப்பத்தில் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற திருவிழாவின்போது பிரச்னை ஏற்பட்டதால் திருவிழா நடத்த காவல்துறை தடை விதித்தது. இந்நிலையில் நேற்று(மார்ச் 17) ஊர் முக்கியஸ்தர்கள் ஒன்றுகூடி காவல்துறை மீண்டும் திருவிழா நடத்த அனுமதிக்கவில்லை என்றால், தேர்தலை புறக்கணித்து ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகளிடம் ஒப்படைப்பதாக முடிவு செய்தனர்.

News March 18, 2024

வானூர்: கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை

image

நாடாளுமன்ற தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் வானூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று(மார்ச் 17) நடந்தது. இதில் கலால் உதவி ஆணையர் முருகேசன், கோட்டக்குப்பம் டிஎஸ்பி சுனில், கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையர் புஹேந்திரி, வானூர் வட்டாட்சியர் நாராயணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பாதுகாப்பு, தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

News March 17, 2024

விழுப்புரம் அரசு பள்ளி மாணவி மாயம்

image

விழுப்புரம் அடுத்த பானாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதரன். இவரது மகள் தரணி (16) விழுப்புரத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 14ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் நேற்று (மார்ச் 16) வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 17, 2024

குறை தீர் நாள் கூட்டம் ரத்து – ஆட்சியர் அறிவிப்பு

image

தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதன் காரணமாக, பிரதி வாரம் திங்கட்கிழமை அன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டமானது மறு தேதி அறிவிக்கும் வரை ரத்து செய்யப்படுவதாக, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி நேற்று (மார்ச் 16) அறிவித்துள்ளார்.

error: Content is protected !!