India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் அமலுக்கு வருகிறது. ஒரு முறை பயணம் செய்வது, ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் 5 முதல் 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் 100 முதல் 400 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம், நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் துவங்கி முதல் இரண்டு நாட்கள் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் நேற்று (மார்ச் 22) உளுந்தூா்பேட்டை வட்டம், பாண்டூா் புதுகாலனியைச் சோ்ந்த கேசவன் மகன் அரசன் (72) விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சி.பழனியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கோவில் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 14ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு இன்று (மார்ச் 23) பணிநாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நிர்வாக காரணங்களால் இன்றைக்குப் பதிலாக மார்ச் 30ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது, முதல்வர் மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியது உள்ளிட்ட மூன்று அவதூறு வழக்குகள் விழுப்புரம் நீதித் துறை நடுவர் மன்றம் எண் 1-இல் தொடுக்கப்பட்டது. நேற்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணையை ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ராதிகா உத்தரவிட்டாா்.
விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக முரளி சங்கர் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகம், புதுவையில் பாஜக கூட்டணி சார்பில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 9 தொகுதிகளுக்கு பாமக சார்பில் தற்போது வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் ஆட்சியர் பழனி நேற்று (மார்ச் 21) வெளியிட்ட செய்திக் குறிப்பில், மேல்மலையனூர் கோவில் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 14ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு நாளை (மார்ச் 23) பணிநாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நிர்வாக காரணங்களால் நாளைக்கு பதிலாக மார்ச் 30ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என குறிப்பிட்டுள்ளார்.
விக்கிரவாண்டி, குண்டலிப்புலியூரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த புகாரையடுத்து கெடார் போலீசார் நேற்று (மார்ச் 20) அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சத்தியமூர்த்தி, கணேஷ், கார்த்திக், பாலு, மணிகண்டன் ஆகிய 5 பேர் பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வெளிமார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்தனர்.
வானூர் அடுத்த புளிச்சப்பள்ளம் காலணி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது வீட்டிற்கு நேற்று (மார்ச் 20) சென்னையில் இருந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 10 பேர் இரண்டு வாகனங்களில் வந்தனர். பின்னர் செல்வக்குமார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த நடராஜர், அம்மன், விநாயகர் உள்ளிட்ட ஐம்பொன் சிலைகளை பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2024 மக்களவைத் தேர்தல், ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணி வேந்தன் போட்டியிடவுள்ளார். கடந்த முறை திமுக கூட்டணியில் காங்கிரஸிலிருந்து விஷ்ணுபிரசாத் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை இத்தொகுதியில் திமுக-வே நேரடியாக களம் காண்கிறது. இதில் போட்டியிடும் தரணி வேந்தன், திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். செஞ்சி மற்றும் மயிலம், ஆரணியின் விழுப்புர மாவட்ட சட்டமன்ற தொகுதிகள்.
செஞ்சி தலவாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் (26). இவர் வானூர் தாலுகா அலுவலகத்தில் லைசென்ஸ் சர்வேயராக பணியாற்றிவந்தார். நேற்று இரவு வானூர்-திருச்சிற்றம்பலம் கூட்ரோடு செல்லும் சாலையில் ஆகாசம்பட்டு பகுதியில் பைக்கில் சென்றபொழுது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். ஜிப்மரில் சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று இரவு இறந்தார். இதுகுறித்து வானூர் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
Sorry, no posts matched your criteria.