Villupuram

News October 23, 2024

தமிழக வெற்றிக் கழக மாநாடு 90 சதவீத பணிகள் நிறைவு

image

விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கான இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மாநாட்டிற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், மாநாட்டு ஏற்பாடுகளில் ஒப்பந்ததாரர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். மாநாட்டு திடலில் 900 கொடி கம்பங்கள் நடும் பணி நடைபெற்று வருகிறது. மாநாட்டு பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

News October 23, 2024

மத்திய அமைச்சருக்கு விழுப்புரம் எம்.பி கடிதம்

image

திண்டிவனம் ரயில் நிலையத்தில் காக்கிநாடா, வைகை, பல்லவன் ஆகிய மூன்று விரைவு ரயில் நின்று செல்ல வேண்டும். மேலும், ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு கழிப்பறை, காத்திருப்போர் அறை, நடைமேடைகளில் முன்பதிவு அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டுமென மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவிக்கு ரவிக்குமார் எம்பி நேற்று கடிதம் அனுப்பி உள்ளார்.

News October 23, 2024

த.வெ.க. மாநாட்டுக்கு 700 சிசிடிவி கேமரா

image

விக்கிரவாண்டி, வி.சாலை பகுதியில் த.வெ.க. மாநாட்டுப் பணிகள் 90% முடிவடைந்துள்ளது. 60 அடி அகலத்திலும், 170 அடி நீளத்திலும், 30 அடி உயரத்திலும் மாநாட்டு மேடை அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு விஜய் வருவதற்கு தனி வழியும், உள்ளே செல்ல 5 வழியும் வெளியே வர 15 வழியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநாட்டுப் பணிகளை கண்காணிக்க 700 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 350 நடமாடும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

News October 23, 2024

த.வெ.க. மாநாட்டில் நடிகர் சௌந்தரராஜன்

image

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில், தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. மாநாடு நடக்கும் இடத்தில், நேற்று நடிகர் சௌந்தரராஜன் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், உலகமே வியக்கும் வகையில் இந்த மாநாடு இருக்கும் எனவும், நான் ஒரு தம்பியாக விஜய் கட்சிக்கு வேலை செய்ய தயாராக உள்ளேன் எனவும் தெரிவித்தார்.

News October 23, 2024

விபத்தில் கல்லூரி மாணவி பரிதாப உயிரிழப்பு

image

விழுப்புரம் மாவட்டம் ரெட்டியார் மில் பேருந்து நிறுத்தம் அருகே, நேற்று இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், கல்லூரி மாணவி கவிநிஷா (19) நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர் சிபிராஜுடன் பைக்கில் சென்றபோது, இந்த விபத்தானது நடந்துள்ளது. படுகாயம் அடைந்த சிபிராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News October 23, 2024

சிலம்பம் போட்டியில் வென்ற சிறுமிக்கு ‘ஆஸ்கார் உலக விருது’

image

அரகண்டநல்லூர் பகுதியில் வசிக்கும் முரளி – நதியா தம்பதியரின் மகள் காவ்யாஸ்ரீ என்ற சிறுமி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில், ஒரு மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி ‘ஆஸ்கார் உலக விருது’ பெற்றார். இவரின் இந்த சாதனைக்கு 3 சான்றிதழ்கள், 1 பதக்கம் மற்றும் 1 கோப்பை கிடைத்துள்ளது. இந்த சிறுமிக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.

News October 23, 2024

கூடுதல் ரயில்கள் நிற்க வேண்டி விழுப்புரம் எம்பியிடம் மனு

image

திண்டிவனம் வட்டம் ரயில் உபயோகிப்பாளர் நல சங்கத்தின் சார்பில், ரயில் பயணிகளின் நலனுக்காக, கூடுதலாக ரயில்கள் திண்டிவனம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று விழுப்புரம் எம்.பி ரவிக்குமாரிடம் இன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவின் மீது உடனடியாக ரயில்வே துறைக்கு, எம்.பி ரவிக்குமார் பரிந்துரைத்து கடிதம் அனுப்பி வைத்தார்.

News October 23, 2024

விழுப்புரம் மத்திய கூட்டுறவு வங்கி துணைப் பதிவாளர் நியமனம்

image

விழுப்புரம் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி துணைப் பதிவாளர் மற்றும் முதன்மை வருவாய் அலுவலராக பா.வெங்கடகுமார் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள துணைப் பதிவாளர் வெங்கடகுமாருக்கு வங்கி பணியாளர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

News October 22, 2024

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (22.10.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News October 22, 2024

விழுப்புரம் வழியாக சென்னை-ராமநாதபுரம் சிறப்பு ரயில்

image

சென்னை-ராமநாதபுரம் சிறப்பு ரயில் (06103) வியாழன், சனி, திங்கள் கிழமைகளில் தாம்பரத்தில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.55 மணிக்கு ராமநாதபுரம் செல்லும். மறு மார்க்கமாக ரயில் (06104) வெள்ளி, ஞாயிறு, செவ்வாய்கிழமைகளில் ராமநாதபுரத்தில் புறப்பட்டு தாம்பரம் வந்து சேரும். இந்த ரயில்கள் விழுப்புரம், கடலூர், சீர்காழி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.