Villupuram

News March 24, 2024

பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ராமதாஸ்

image

திண்டிவனம் அடுத்த கோவடி கிராமத்தில், விழுப்புரம் மக்களவை தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து நடைபெற்ற பொது கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசு பேசினார். இந்த நிகழ்வில் பாமக சட்டமன்ற உறுப்பினர்கள், விழுப்புரம் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

News March 24, 2024

விசிக பொதுச்செயலாளருக்கு அமைச்சர் ஆதரவு

image

விழுப்புரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமாரை ஆதரித்து, வானூர் திருமண மண்டபத்தில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். 

News March 24, 2024

விழுப்புரம்: பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

image

விக்கிரவாண்டி, எழாய் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி ஐஸ்வர்யா. கடந்த மார்ச் 21-ம் தேதி வெங்கடேசன் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது ஐஸ்வர்யாவிற்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஐஸ்வர்யா கேட்ட நிலையில், அவரை வெங்கடேசன் மற்றும் உறவினர்கள் திட்டி கொடுமைபடுத்தியுள்ளனர் . இதுகுறித்து விழுப்புரம் மகளிர் போலீசார் (மார்ச் 24) 9 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News March 24, 2024

விழுப்புரம்: முன்னாள் படை வீரர்கள் கவனத்திற்கு

image

தேர்தல் பணியில் ஈடுபட விருப்பமுள்ள விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரா்கள், படைவீரர் நல உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு அசல் படைப்பணிச் சான்றிதழ், அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் சென்று, தங்களது பெயரை பதிவு செய்துகொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 04146-220524 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி நேற்று (மார்ச் 23) செய்தி வெளியிட்டுள்ளார்.

News March 24, 2024

விழுப்புரம்: நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு

image

மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி, நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, விழுப்புரத்தில் இயக்குநர் மு.களஞ்சியம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 24, 2024

செஞ்சி அருகே சித்த மருத்துவர் விபத்தில் பலி

image

திருவண்ணாமலையை சேர்ந்தவர் சசிகுமார், மனைவி சித்ரா. செஞ்சி அடுத்த நல்லான்பிள்ளைபெற்றால் அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவராக பணிபுரியும் சித்ரா நேற்று (மார்ச் 23) பணியை முடித்துவிட்டு மொபட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது புத்தகரம் அருகே எதிரே வந்த கார் மோதியதில் நிகழ்விடத்திலேயே பலியானார். இது குறித்து நல்லான்பிள்ளைபெற்றால் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 23, 2024

திருவெண்ணெய்நல்லூர் அருகே தேர் திருவிழா

image

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்துள்ள பிரசித்தி பெற்ற ஒட்டந்னதல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முருகன் கோயிலில் பங்குனி மாத உற்சவத்தை ஒட்டி இன்று (மார்ச் 23) பங்குனி உத்திர திருத்தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் முருகப்பெருமானை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர்.

News March 23, 2024

விழுப்புரம் அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமனம்

image

மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சி நிர்வாகிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கான அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் சி.வி.சண்முகம், செஞ்சி ராமச்சந்திரன், இ.பாலமுருகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

News March 23, 2024

விழுப்புரம்: ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு

image

விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் அமலுக்கு வருகிறது. ஒரு முறை பயணம் செய்வது, ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் 5 முதல் 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் 100 முதல் 400 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

News March 23, 2024

விழுப்புரம் சுயேச்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

image

விழுப்புரம், நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் துவங்கி முதல் இரண்டு நாட்கள் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் நேற்று (மார்ச் 22) உளுந்தூா்பேட்டை வட்டம், பாண்டூா் புதுகாலனியைச் சோ்ந்த கேசவன் மகன் அரசன் (72) விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சி.பழனியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.

error: Content is protected !!