India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்ட கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த வேட்பாளர்களின் பெயர், சின்னம் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய Ballot Sheet பாதுகாப்பாக சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பிவைக்கும் பணி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான சி.பழனி தலைமையில் நேற்று (ஏப்ரல் 9) நடைபெற்றது. அப்போது தேர்தல் வட்டாட்சியர் கணேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வேம்புண்டி புதிய கணினியை சேர்ந்த ஆறுமுகம் (22) நேற்று (ஏப்ரல் 9) சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சலிட்டுள்ளார். சத்தம் போட்டால் கொன்றுவிடுவேன் எனவும் மிரட்டி உள்ளார். இதனை அடுத்து குழந்தையின் பெற்றோர் புகார் அளித்ததின் பேரில் வெள்ளிமேடுபேட்டை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் ஆறுமுகத்தை கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் பாக்யராஜ் (நேற்று 9) இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய எம்பி சி.வி.சண்முகம், 10 ஆண்டுகால மோடி அரசும் மூன்று ஆண்டுகால ஸ்டாலின் அரசும் மக்களை வேலையில்லாமல் திண்டாட வைத்துள்ளன என குற்றம் சாட்டினார். உடன் கோலியனூர் அதிமுக ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு தேமுதிக ஒ.செ. ராமலிங்கம் உட்பட திரளாக பல கலந்து கொண்டனர்.
இலங்கையை சேர்ந்தவர் யுகேந்திரன்(29), கீழ்புத்துப்பட்டு அகதிகள் முகாமில் வசித்து வந்தார். அதே முகாமை சேர்ந்த சுவாதியை திருமணம் செய்த யுகேந்திரன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் சுவாதி தாய் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று இரவு சுவாதியுடன் ஏற்பட்ட தகராறில் யுகேந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்தார். கோட்டக்குப்பம் போலீஸ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் தோட்டக்கலை மூலம் 100 சதவீத வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் செயற்கையான மலர்கள் செடிகள் மூலம் “என் வாக்கு என் உரிமை” 100% வாக்களிப்பு வாசகங்களால் அலங்கரிக்கப்பட்ட விழிப்புணர்வு பதாகை முன்பாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நேற்று (ஏப்ரல் 8) பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த எல்இடி விளம்பரம் வைக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை ஒட்டி திண்டிவனம் சார் ஆட்சியர் தியான்ஷீ நிகாம் ஏற்பாட்டில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே 100% வாக்களிக்க வேண்டி எல்இடி விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் விசிக வேட்பாளர் ரவிக்குமார் மரக்காணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலம்பாக்கம், கந்தாடு, புதுப்பாக்கம், நடுக்குப்பம் பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இந்த நாடாளுமன்ற தேர்தல், நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம். இதில் நாம் வெற்றி பெற்று நாட்டை காப்பாற்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரியுங்கள், என்றார்.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி கப்பியாம்புலியூர், வா.பகண்டை, அய்யூர் அகரம் உள்ளிட்ட பகுதிகளில் பா. ம. க வேட்பாளர் முரளி சங்கருக்கு ஆதரவாக பா.ம.க வடக்கு மாவட்ட செயலாளர் சி.சிவக்குமார் பிரச்சாரம் செய்தும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் தீவிர வாக்கு சேகரிப்பில் இன்று ஈடுபட்டார். இதில் பா.ம.க நிர்வாகிகள் வேட்பாளருக்கு மாலை , சால்வை அணிவித்து வரவேற்றனர்.
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ புகழேந்தி இரண்டு நாட்களுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார். இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்தத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறலாம், அதற்கான அறிவிப்பும் சில நாள்களில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம் தெளி கிராமத்தில் அடிக்கடி மின்னழுத்த பற்றாக்குறை ஏற்படுகிறது. அதுபோக மாலை 4 மணிக்கு துண்டிக்கப்படும் மின்சாரம் இரவு 9 மணிக்குதான் வருகிறது. அடிக்கடி இதுபோல நடப்பதால் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு படிக்கின்ற மாணவர்கள் மிகவும் பாதிப்பை சந்திக்கின்றனர். குழந்தைகளும், பெரியவர்களும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
Sorry, no posts matched your criteria.