Villupuram

News June 10, 2024

விழுப்புரம்: வாழ்த்திய சௌமியா அன்புமணி

image

விழுப்புரம் மாவட்டம் – மயிலம் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி சன்னதியில் நேற்று (ஜூன் 9) நடைபெற்ற, பாட்டாளி சமூக ஊடக பேரவையின் மாநில துணை ஒருங்கிணைப்பாளர் டி.வெற்றிச்செல்வம் – எஸ்.விஜயா இணையரின் திருமண விழாவில் பசுமலை தியாகத்தின் மாநில தலைவர் சௌமியா அன்புமணி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். உடன் பாமக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

News June 9, 2024

மணமக்களை வாழ்த்திய அமைச்சர் பொன்முடி

image

விழுப்புரம் அடுத்த பானாம்பட்டு வார்டு கழக துணைச் செயலாளர் ஆர்.எஸ்.முருகன் இல்ல திருமண விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் க.பொன்முடி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். உடன் நகரச் செயலாளர் இரா.சக்கரை, சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், தகவல் தொழில்நுட்ப அணி ப.அன்பரசு, வார்டு செயலாளர் சண்முகம், அவைத் தலைவர் ஜனார்த்தனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News June 9, 2024

விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

தமிழக முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் தேர்வு நடைபெறும் மையங்களில் அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தேர்வு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News June 9, 2024

மின்சாரம் தாக்கியதில் வாலிபர் பலி

image

திண்டிவனம் அடுத்த வடஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் விஜயரங்கன்(27). புதிய வீட்டின் பாத்ரூமில் ஒயரிங் வேலை நடந்து வந்தது. நேற்று (ஜூன் 8) விஜயரங்கன் ஸ்விட்ச் போர்டில் இணைக்கப்பட்டிருந்த டிரில்லிங் மிஷினில் இருந்த மின்சார ஒயரை கையில் சுற்றிய போது, மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்தவர் உயிரிழந்தார். இதுகுறித்து ரோஷனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 9, 2024

திண்டிவனம் அருகே நாய்கள் துரத்திய மான் மீட்பு

image

திண்டிவனம் அடுத்த கீழ்மாவிலங்கை கிராமத்தில், நேற்று (ஜூன் 8) வனப்பகுதியில் இருந்து வழி தெரியாமல் மான் வந்துள்ளது. இந்த மானை நாய்கள் துரத்தி கடித்தது. நாய்களிடம் இருந்து மானை கிராம மக்கள் மீட்டு, திண்டிவனம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். நாய்கள் கடித்ததால் காயமடைந்த மானுக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து பின் மானை வனப்பகுதியில் விட்டனர்.

News June 8, 2024

துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு

image

பொதுமக்கள் முதலீடு செய்வதில் விழிப்புணர்வுடன் இருக்கும் வகையில் விழுப்புரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு சார்பில், பொதுமக்களிடம் மோசடி செய்யும் நிதி நிறுவனங்கள் பற்றிய முன்னெச்சரிக்கை துண்டு பிரசுரங்களை காவல்துறை பல்வேறு பகுதிகளில் வழங்கி வருகின்றனர். இதில், இந்திய ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்த வங்கி சாரா நிதி நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்தல் வேண்டும் என பொதுமக்களுக்கு கூறப்பட்டுள்ளது.

News June 8, 2024

கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

image

விழுப்புரம் தாலுகா காவல் ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் புதிய பேருந்து நிறுத்தம் அருகே இன்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இரு நபர்களை சோதனை செய்ததில், இருவரும் வைத்திருந்த பேக்கில் சுமார் 10 கிலோ எடை கொண்ட கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ராஜசுந்தர பாண்டி (27), ரஞ்சித் (28) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

News June 8, 2024

செஞ்சி: தேர் திருவிழாவில் அமைச்சர் பங்கேற்பு

image

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த சிங்கவரம் ஸ்ரீ ரங்கநாதர் சுவாமி திருக்கோவில் பிரம்மோற்சவ தேர் திருவிழாவில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே. எஸ். மஸ்தான் அவர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தார். உடன் செஞ்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் R. விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் மற்றும் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.

News June 8, 2024

விக்கிரவாண்டி: ரயில்வே தளவாட பொருட்கள் திருடிய சிறுவர்கள் 

image

விக்கிரவாண்டி போலீசார் நேற்று(ஜூன் 7) டோல்கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்ததில், 17 வயதுடைய 2 சிறுவர்கள் சாக்கு பையில் வி.சாத்தனுார் ரயில்வே கேட் பகுதியிலிருந்து ரயில்வே இரும்பு தளவாட பொருட்களை திருடி வந்தது தெரியவந்தது. பிடிப்பட்ட இருவரையும் திண்டிவனம் ரயில்வே போலீசாரிடம் விக்கிரவாண்டி போலீசார் ஒப்படைத்தனர்.

News June 7, 2024

எண்ணெய் துவரம் பருப்பு மீண்டும் வழங்கப்படும்

image

06.06.24. விழுப்புரம்
2024 தேர்தல் முன்னிட்டு தேர்தல் நடத்தை விதி அமுலில் இருந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் துறை மூலம் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அத்தியாவசியப்பொருளான பாமோலின் எண்ணெய் மற்றும் துவரம்பருப்பு பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2024-மே மாதம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 2024-ஜீன் மாதத்தில் முதல் வாரத்தில் வழங்கப்படும்

error: Content is protected !!