India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய சமூக நீதித் துறை அமைச்சர் வீரேந்திர குமாருக்கு விசிக பொதுச் செயலரும், விழுப்புரம் மக்களவை உறுப்பினருமான து.ரவிக்குமார் நேற்று கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ.6,000ஆக உயர்த்தி வழங்க வேண்டும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் விண்ணப்பித்த அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் கருத்து?
மயிலம் அடுத்த ரெட்டணையில் உள்ள ஹோலி ஏஞ்சல் பள்ளி மாணவர்கள், நாமக்கலில் நடந்த மாநில அளவிலான சிலம்பம் உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி பரிசு பெற்றனர். அவர்களுக்கு, பள்ளி நிறுவனர் பழனியப்பன், முதுநிலை முதல்வர் அகிலா பழனியப்பன் மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளி முதல்வர் எரோமியாஸ் பிஸ்கோ, சிலம்ப ஆசிரியர் அபிமன்யு ஆகியோர் நேற்று (அக்.23) பரிசு வழங்கி பாராட்டினர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் கட்சித் தொண்டர்களுக்கு, சட்ட ரீதியாக உதவிடும் வகையில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு மாநாட்டுப் பணிகள் முழுவீச்ல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
விக்கிரவாண்டி அருகே வி சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முதல் மாநில மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதற்கான மாநாட்டு திடல் பகுதியில் பணிகள் மும்முரமாக இரவு பகலாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இங்கு காமராஜர், பெரியார், விஜய், அம்பேத்கர் என பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட உருவ கட்-அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (23.10.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
ஒரத்தூர் நன்னாடு, பேரணி, கூட்டேரிப்பட்டு, முண்டியம்பாக்கம், ஆகிய ஊர்களில் கடந்த வருடம் தீபாவளி சீட்டு நடத்தி முறையாக பணம் தராமல் ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்க ஒரு வருடம் முன்பு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்று மீண்டும் மனு அளிக்க வந்த சீட்டு கட்டி ஏமாந்த கிராம பெண்கள் தாங்கள் இழந்த பணத்தை மீட்டுத் தர கோரிக்கை விடுத்தனர்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். மாவட்ட துணை கண்காணிப்பாளர் தலைமையில் சோதனை நடந்து வருகிறது. பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்சம் பெறுவதாக வந்த புகாரை அடுத்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளிடமிருந்து உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு அக்-29 மற்றும் நவ-5 ஆகிய தேதிகளில் இரவு 11.45 க்கு சிறப்பு ரயில் (06001) இயக்கப்பட உள்ளது. மறுமார்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து அக்-30 மற்றும் நவ-6 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.45 மணிக்கு சிறப்பு ரயில் (06002) இயக்கப்படும். மேலும் இந்த ரயில்கள் விழுப்புரம், விருதாச்சலம், நாகர்கோவில் வழியாக இயக்கப்படவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கான இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மாநாட்டிற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், மாநாட்டு ஏற்பாடுகளில் ஒப்பந்ததாரர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். மாநாட்டு திடலில் 900 கொடி கம்பங்கள் நடும் பணி நடைபெற்று வருகிறது. மாநாட்டு பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.