Villupuram

News June 24, 2024

நாம் தமிழர் நாளை முதல் பிரச்சாரம்

image

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் நாளை முதல் விக்கிரவாண்டி தொகுதியில் பிரச்சாரம் செய்ய உள்ளார். மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்ற பிறகு நாம் தமிழர் கட்சி சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், அந்த கட்சி விக்கிரவாண்டி தொகுதியில் எவ்வளவு ஓட்டுகளை பெறும் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

News June 24, 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை

image

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உளள்து. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற நாளை மறுநாள் (ஜூன் 26) கடைசி நாளாகும். அன்றைய தினமே வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு, உத்தேச பட்டியல் வெளியிடப்படும்.

News June 23, 2024

திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

image

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைதேர்தல் நடைபெற உள்ளதை ஒட்டி எசாலம் ஊராட்சியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அன்னியூர் சிவா (ஜூன் 22) இன்று தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். உடன் திமுக மாவட்ட பொறுப்பாளர் பொன். கௌதம சிகாமணி, திமுக ஒன்றிய செயலாளர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

News June 23, 2024

விழுப்புரம்: இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால், விழுப்புரம் உள்பட 20 மாவட்டங்களில் இன்று (ஜூன்.23) இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News June 23, 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை பரிசீலனை

image

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல், வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த 14ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதில், திமுக, பாமக, நாதக போன்ற முன்னணி கட்சியினர் போட்டியிடுகின்றனர். 26ஆம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் என்பதால் அன்று வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.

News June 23, 2024

தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

image

விழுப்புரத்தில் எவரேனும் கள்ளச்சாராயம் குடித்தார்களா? என விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் விற்ற கள்ளச்சாராயத்தை குடித்த ஒருவருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டது, அதிர்ச்சி அளிக்கிறது. கள்ளச்சாராயம் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதையே இது காட்டுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

News June 22, 2024

மின்சாரம் தாக்கி இரண்டு சிறுவர்கள் பலி

image

திருவெண்ணெய்நல்லூர் அருகே தடுத்தாட்கொண்டூர் கிராமத்தில் உள்ள வயல்வெளி பம்ப்செட் மோட்டாரில் இன்று 6 மற்றும் 3ஆம் வகுப்பு படிக்கும் 2 பள்ளி சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது மேலே சென்ற மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News June 22, 2024

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி

image

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய சேமிப்பு கிடங்கிலிருந்து, 75.விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்தல் பயிற்சி வகுப்பிற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி, அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.

News June 22, 2024

கள்ளச்சாராயம் குடித்த இருவர் மருத்துவமனையில் அனுமதி

image

விழுப்புரம், சித்தேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் பிரவீன், ஜெகதீஷ். இருவரும் அவர்களது நண்பர்களுடன் கடந்த 3 நாளுக்கு முன் சங்கராபுரம், தேவபாண்டலம் சென்று சாராயம் குடித்துள்ளனர். இந்நிலையில், உடல் உபாதை ஏற்பட்டு இன்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து ஏற்கெனவே பலர் உயிரிழந்தும் சாராயம் குடிப்பது தொடர்கதையாகவே உள்ளது.

News June 22, 2024

மூன்று நாளில் சாராயம் விற்ற 125 பேர் கைது

image

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் பலியான விவகாரத்தை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில் கடந்த மூன்று நாட்களில் சாராயம் மதுபானம் விற்ற 125 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கண்காணிப்பு பணி தொடரும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!