India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோட்டக்குப்பம் அமீது நகரை சேர்ந்தவர் முகமது பாரூக் (50). இவரது மனைவி வகிதாபானு கோட்டக்குப்பம் 12ஆவது வார்டு கவுன்சிலராக சுயேட்சையாக வெற்றி பெற்று பின்னர் திமுகவில் இணைந்தார். முகமது பாரூக் சின்ன கோட்டக்குப்பத்தில் உள்ள தனியார் பார்ம் ஹவுஸில் அறை எடுத்து தங்கி இருந்தார். இந்த நிலையில், இன்று காலை அவரது அறையில் பிணமாக கிடந்தார். உடலை மீட்டு கோட்டக்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கோடைக்கால வெப்பம் தொடர்பான சிகிச்சை பிரிவினை முதன்மைச் செயலாளர்/ஆணையர், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர் சஹாய் மீனா, மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி அவர்கள் தலைமையில் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(மே 8) அதிகாலை முதலே, இடியுடன் கூடிய மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த நிலையில் விழுப்புரம் அருகே உள்ள வழுதரெட்டி என்ற பகுதியில், இடி விழுந்து தென்னை மரம் ஒன்று தீப்பற்றி எரிந்தது. மழையின் தாக்கம் இன்னும் குறையாமல், குளிர்ந்த காற்று வீசி வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
விழுப்புரம் மக்களவைத் (தனி) தொகுதியில் பதிவான வாக்கு இயந்திரங்கள், அரசினர் அறிஞர் அண்ணா கலை அறிவியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இதில், இன்று (மே 7) 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான அறையில் சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை. அரை மணி நேரம் கேமரா வேலை செய்யாத நிலையில் ஆட்சியர் ஆய்வில் இறங்கினார். சில தினங்களுக்கு முன்பு இதே போன்று மின்னழுத்தம் காரணமாக சிசிடிவி வேலை செய்யாமல் போனதும் குறிப்பிடத்தக்கது.
கோடை வெயில் கடுமையாக வாட்டி வதைத்த நிலையில் இன்று காலை முதல் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. மழை நீர் தேங்கி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் குளம்போல காட்சியளிக்கிறது. இதனால் பேருந்துகள் மற்றும் பயணிகள் வந்து செல்வதற்கு சிரமமாக உள்ளது. கோடை மழையால் குளிர் காற்று வீசி மக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
திருவெண்ணைநல்லூர் வட்டம், தி. புதுப்பாளையம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் இளைநிலை உதவி ஆய்வாளராக பணிபுரியும் அரகண்டநல்லூர் பகுதியை சேர்ந்த சுந்தரபெருமாள் என்பவர் பள்ளி வளாகத்தில் உள்ள தனது இருக்கையில் இன்று (மே 7) இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிகழ்வில் சிறந்த கல்வியாளர்கள் கலந்துகொண்டு 12ம் வகுப்பிற்கு பிறகு உயர்கல்வியியல், கலை அறிவியல், பொறியியல், அறிவியல் தொழில்நுட்ப பிரிவுகள் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பது தொடர்பாக விரிவான தகவல்களை மாணவ, மாணவியருக்கு வழங்க உள்ளனர். அதன்படி, விழுப்புரத்தில் மே 11ம் தேதி இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தின் காணை, பெரும்பாக்கம், கோனூர், மாம்பழப்பட்டு, சென்னாகுனம், கல்பட்டு, பிடாகம் உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் இன்று காலை முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் கோடை வெயில் கொடுமையால் வாடி வந்த மக்களுக்கு ‘வாராது வந்த மாமணியாய்’ வந்த இந்த கனமழை குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியதோடு, அவர்களது மனங்களை மகிழ்வித்துள்ளது.
செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடம் மிகவும் பிரசித்தி பெற்ற விற்பனை கூடமாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து மற்றும் கிராம பகுதியில் இருந்து விவசாயிகள் விளைவித்த நெல் மற்றும் மணிலா பொருட்களை கொண்டு வந்தனர். இன்று ஒரே நாளில் மட்டும் 10,000 நெல் மூட்டைகள் விற்பனைக்காக குவிந்தன.
தமிழில் முன்னணி Short News செயலியான Way2News-ல், உங்களை சுற்றி நடக்கும் உள்ளூர் நிகழ்சிகள், புகார்கள், கோரிக்கைகள், அரசியல் நிகழ்வுகளை செய்திகளாக பதிவேற்றி நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
Sorry, no posts matched your criteria.