Villupuram

News July 7, 2024

விழுப்புரத்தில் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு தீவிர பிரச்சாரம் நடைபெற்று வந்த நிலையில், நாளை (ஜூலை 8) மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவடைகிறது. தொகுதிக்கு வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் மாலை 6 மணிக்குமேல் தொகுதிக்குள் இருக்கக் கூடாது. அவர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று மாநில தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாஹூ அறிவுறுத்தியுள்ளார்.

News July 7, 2024

இன்று பிரசாரத்தை தொடங்குகிறார் உதயநிதி

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளா் அன்னியூா் சிவாவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்றும், நாளையும் பிரச்சாரம் செய்யவுள்ளாா். முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் வீடியோ பதிவு மூலம் பிரச்சாரம் செய்தார். நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைய உள்ளதால், பிற கட்சிகள் முழுவீச்சில் பிரச்சாரம் செய்து வருகின்றன. இடைத்தேர்தல் வரும் 10ஆம் தேதியம், வாக்கு எண்ணிக்கை 13ஆம் தேதியும் நடைபெற உள்ளது

News July 7, 2024

ராமதாஸை விமர்சித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்

image

பாமகவின் 2ஆம் கட்டத் தலைவர்கள் பழைய முகங்களாகிப் போனதால், மருமகளையும் பேத்தியையும் ராமதாஸ் பிரச்சாரத்தில் இறக்கியுள்ளார் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் விமர்சித்துள்ளார். நேற்று விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பதிவாகும் வாக்குகளில் 80% திமுக வேட்பாளருக்கு கிடைக்கும். மகளிர் உரிமைத்தொகை புதுமைபெண் திட்டம் மூலம் பயன்பெறுவோர்களின் வாக்குகளும் திமுகவுக்குதான் கிடைக்கும்” என்றார்.

News July 7, 2024

மக்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும்

image

மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டியது அரசின் கடமை என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். விக்கிரவண்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளாா். தமிழகத்தில் அரசியல் தலைவா்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீா்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முதல்வா் மேற்கொள்ளவேண்டும் எனத் தெரிவித்தார்.

News July 7, 2024

பறக்கும் படையினர் சோதனை குறித்து ஆட்சியர் ஆய்வு

image

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொள்ளும் பகுதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலராகிய மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News July 6, 2024

பறக்கும் படையினர் சோதனை குறித்து ஆட்சியர் ஆய்வு

image

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொள்ளும் பகுதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலராகிய மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News July 6, 2024

விழுப்புரத்தில் தலித் அமைப்பினர் சாலை மறியல்

image

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய குடியரசு கட்சி, சமாஜ் பார்ட்டி மற்றும் தலித் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக பிடிக்க வேண்டுமெனவும், சிபிஐ விசாரிக்க வேண்டுமெனவும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர், தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News July 6, 2024

விழுப்புரம்: 4 நாள்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

image

விக்கிரவாண்டி இடைத்தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாள்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது. விக்கிரவாண்டி இடைத்தோ்தல் வரும் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதன் காரணமாக 8ஆம் தேதி காலை 10 மணி முதல் 10ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 13ஆம் தேதியும் மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள், தனியாா் மதுபானக் கடைகள் மூடப்படும்.

News July 6, 2024

பாமக வென்றால் தான் சமூக நீதி கிடைக்கும்

image

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எண்ணாயிரம் ஊராட்சியில், பாமக வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. இந்த தேர்தலில் பாமக வென்றால் தான் சமூக நீதியானது நிலைநாட்டப்படும், வன்னியர்களுக்கான உரிமை மீட்கப்படும். அதனால், பாமக வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள்” எனத் தெரிவித்தார்.

News July 5, 2024

திமுக வெற்றி பெறும் – தொல். திருமாவளவன்

image

 விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு ஆதரவாக விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட நேமூர், ஒரத்தூர், தொரவி ஆகிய கிராமங்களில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது தமிழகத்தில் நடைபெறும் அனைத்து தேர்தலிலும் திமுக கூட்டணி வெல்லும் என்று குறிப்பிட்டு பேசினார்.

error: Content is protected !!