Villupuram

News July 10, 2024

பாமக வேட்பாளர் சி.அன்புமணி வாக்களித்தார்

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பாமக வேட்பாளர் சி.அன்புமணி தொண்டர் படையுடன் பனையபுரம் வாக்குச்சாவடியில் வந்து தனது வாக்கை செலுத்தினார். நேற்று உடல்நலக் குறைவு காரணமாக விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பெற்று நேற்றிரவு வீடு திரும்பினார். முன்னதாக, திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவும் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

News July 10, 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வாக்காளர்களுக்கு கட்டுப்பாடு

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்காளர்கள், வாக்குப்பதிவு மையங்களுக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை செல்போன் எடுத்து சென்றால் வீட்டிற்கு போய் வைத்துவிட்டு வரும்படி வாக்காளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வாக்களிக்க வருபவரிடம் செல்போன் இருக்கிறதா? என்று சோதித்த பிறகு அனுமதி வழங்கப்படுகிறது. பதற்றமான வாக்கு சாவடிகளில் போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

News July 10, 2024

விக்கிரவாண்டி: வாக்கு இயந்திரங்கள் பழுது

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 3 வாக்கு மையங்களில் வாக்கு பதிவு இயந்திரங்கள் பழுதானதால், வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காணை ஒன்றியத்துக்கு உட்பட்ட 126ஆவது வாக்கு மையம், மாம்பழப்பட்டு 66ஆவது வாக்கு மையம், ஒட்டன் காடுவெட்டி பகுதியில் உள்ள 68ஆவது மையம் ஆகியவற்றில் வாக்கு இயந்திரங்கள் வேலை செய்யவில்லை. இந்நிலையில், வாக்கு இயந்திரங்களை சரி செய்யும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

News July 10, 2024

CCTV கேமராக்கள் மூலம் வாக்குப்பதிவு கண்காணிப்பு

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி மையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம், வாக்குப்பதிவு தொடர்பான ஒட்டுமொத்த செயல்பாடுகளையும், மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி, தேர்தல் காவல் பார்வையாளர் அஜய் குமார் பாண்டே உள்ளிட்டோர் கண்காணித்து வருகின்றனர். மேலும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

News July 10, 2024

வாக்களித்தார் அன்னியூர் சிவா!

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அரசு மேல்நிலைப் பள்ளியில் முதல் ஆளாக தனது வாக்கை செலுத்தியுள்ளார். காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வகுப்பதிவானது மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. தொகுதியில் மொத்தம் 2.37 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற தேர்தல் ஆணையம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

News July 10, 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 29 வேட்பாளர்கள் போட்டி

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் கட்சியின் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளர் அன்னியூர் சிவா, பாமக சார்பில் வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் பொ.அபிநயா உள்ளிட்ட 11 கட்சி வேட்பாளர்கள், 18 சுயேச்சைகள் என மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மாற்றுத்திறனாளி, மூத்த குடிமக்கள் சிரமமின்றி வாக்களிக்க சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

News July 10, 2024

BREAKING: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடங்கியது

image

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தற்போது தொடங்கியது. 3 எஸ்.பி.க்கள் மேற்பார்வையில் 3,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு நலன் கருதி, டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. 1,16,962 ஆண்கள், 1,20,040 பெண்கள், 29 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,37,031 வாக்காளர்கள் உள்ளனர். திமுக, பாமக, நாதக என மும்முனை போட்டியாக இந்தத் தேர்தல் இருக்க போகிறது.

News July 10, 2024

இன்னும் சற்று நேரத்தில் விக்கிரவாண்டியில் வாக்குப்பதிவு

image

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. தேர்தல் அமைதியாக நடக்க, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 276 வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை நடைபெறும் என்பதால் வாக்காளர்கள் தவறாமல் ஜனநாயக கடமையை ஆற்றுங்கள் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News July 9, 2024

பாமக வேட்பாளர் மருத்துவமனையில் அனுமதி

image

நாளை விக்கிரவாண்டி சட்டமன்றத் தேர்தல் வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் நேற்றோடு பிரச்சாரம் முடிவுற்றது. தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த விக்கிரவாண்டி தொகுதி பாமக வேட்பாளர் அன்புமணி இன்று மாலை திடீர் உடல்நல கோளாறு காரணமாக விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் உடல்நிலை தேதி வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

News July 9, 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நேரில் சென்று ஆட்சியர் ஆய்வு

image

75.விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், வாக்கு எண்ணும் மையத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளை அறிந்துகொள்ளும் விதமாக கண்காணிப்பு கேரமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி, அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

error: Content is protected !!