Villupuram

News May 20, 2024

குடிநீர் தட்டுப்பாட்டினை தடுக்க முன்னெச்சரிக்கை

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கோடை வறட்சியால் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிலுவையில் உள்ள குடிநீர் பணிகளை விரைந்து முடித்தல், சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல் மற்றும் காலை உணவுத் திட்டம் அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும் துவங்குதல் குறித்த மாவட்ட அளவிலான கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி தலைமையில் இன்று நடைபெற்றது.

News May 20, 2024

விழுப்புரத்தில் கஞ்சா வழக்குகள்: 56 பேர் கைது

image

விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 48 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
56 பேர் கைது செய்யப்பட்டு 63 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மூன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் 283 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 292 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

News May 20, 2024

விழுப்புரத்தில் போதைப்பொருள் தடுப்பு குறித்த ஆய்வு கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் போதை பொருட்கள் தடுப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் தீபக் சிவாச் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் போதைப்பொருள் கட்டுப்படுத்துவது எப்படி என்று விவாதிக்கப்பட்டது.

News May 20, 2024

தடுப்பு கட்டையில் மோதி பேருந்து விபத்து

image

விழுப்புரம் மாவட்டம் புதுச்சேரி சாலையில் இன்று (மே 20) கெங்கராம்பாளையம் மல்ராஜன்குப்பம் வளைவில்
தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ஒருவருக்கு பற்கள் முழுவதும் உடைந்துவிட்டது.
பெண் ஒருவருக்கு கண் புருவத்தில் பலத்த அடி,
ஒரு மூதாட்டிக்கு கண்ணில் அடிபட்டது. இவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

News May 20, 2024

விழுப்புரம் அருகே மின்தடை அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்டம், கெங்கராயபாளையம் துணைமின் நிலையம் பகுதியில் நாளை (மே 21) காலை 9 மணி முதல் 11 மணி வரை மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. எனவே, ஆழியூர், எல்.ஆர்.பாளையம், கரைமேடு, பள்ளி கொண்டாபுரம், பள்ளிநேளியனூர், கெங்கராபாளையம், மல்ராஜன்குப்பம், வி.புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News May 20, 2024

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் மழை

image

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் அதிகாலையில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. விழுப்புரம், விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம், காணை, மாம்பழப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துவருகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை சற்று பாதித்துள்ளது. சாலைகளில் போக்குவரத்து குறைவாக உள்ளது. மழை தொடர்ந்து நீடிக்கும் என்று கூறப்படுகிறது, வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

News May 20, 2024

விழுப்புரம்: பாம்பு கடித்து சிறுவன் உயிரிழப்பு

image

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கருவேப்பிலைபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மருதமலை என்பவரது மகன் அய்யனார் (15). இவர் பாம்பு கடித்ததில் நேற்று (மே 19) உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்த சம்பவம் குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 19, 2024

விழுப்புரம்: விபத்தில் வியாபாரி பலி

image

விழுப்புரம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மாமந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (49).பாய் வியாபாரி நேற்று மாலை 5 மணி அளவில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மாமந்தூர் கூட்ரோடு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை இருசக்கரவாகனத்தில் கடக்க முயன்றார். அப்போது, அவ்வழியாக பின்னால் வந்த கார் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News May 19, 2024

விழுப்புரம் சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை!

image

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அடுத்த கண்டமங்கலம் குழுவின் நிலையத்தில் உள்ள கொத்தமங்கலம் பகுதியில் நாளை (மே.20) மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்சாரத்துறை அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகளுக்காக கொத்தமங்கலம் உயர் அழுத்த மின் பாதையில் காலை 9 மணி முதல் 11 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என கண்டமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர் சிவகுரு தெரிவித்துள்ளார்.

News May 19, 2024

விழுப்புரம் கஞ்சா விற்ற நபர் கைது!

image

விழுப்புரம்,திண்டிவனம் அடுத்த மயிலம் காவல்துறையினர் நேற்று (மே 18) இரு இளைஞர்களை கஞ்சா வழக்கில் கைது செய்தனர். மயிலம் சுடுகாட்டில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்வதை சமூக அலுவலர்கள் காவல்துறைக்கு தெரிவித்த வண்ணம் இருந்தனர். இது தொடர்பாக கூட்டேரிப்பட்டு சந்தோஷ் மயிலம் பகுதியைச் சேர்ந்த கோகுல் என்ற இளைஞர்களை மயிலம் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

error: Content is protected !!