India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டம் மண்டகப்பட்டுவைச் சேர்ந்தவர் கன்னியப்பன் (34), ஆட்டோ டிரைவர். இவர் வழக்கம்போல் நேற்று ஆட்டோ ஓட்ட சென்றுவிட்டார். அவரது மனைவி விவசாய வேலைக்காக வீட்டை பூட்டி சாவியை படியில் மறைத்து வைத்துவிட்டுச் சென்றார் 3 மணியளவில் திரும்பிவந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பெட்ரூமில் வைத்திருந்த ஆறரை சவரன் நகைகள் திருடுபோனது தெரியவந்தது.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மயிலம் ஊராட்சியில் திமுக நிர்வாகி சந்தோஷ் இல்ல புதுமனை புகு விழாவில் நேற்று (மே 22) சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் கலந்துகொண்டு வாழ்த்தினார். இந்த நிகழ்வில் மயிலம் திமுக ஒன்றிய செயலாளர் மணிமாறன் உள்ளிட்ட திமுகவினர் உடன் இருந்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (மே.22) மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. விழுப்புரம் மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரத்தில் டாஸ்மாக் கேண்டீன் ஊழியர் ராஜா என்பவர் கடந்த மாதம் போலீஸ் சித்திரவதையால் கொல்லப்பட்டதாக அவரது மனைவி தாக்கல் செய்த மனுவில், சென்னை உயர்நீதிமன்றம் அவரது உடலை மறு கூராய்வு செய்ய உத்தரவிட்டிருந்தது. அந்த வகையில் இன்று சென்னை மதுரையைச் சேர்ந்த மருத்துவர்களை கொண்டு விழுப்புரத்தில் உடல் கூராய்வு நடைபெற்றது. ஆட்சியர் பழனி நீதித்துறை நடுவர் முன்னிலையில் நடத்தப்பட்டது. அறிக்கை விரைவில்…
கடந்த 40 நாட்களுக்கு முன்பு விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ராஜா கொடும் சித்திரவதை செய்யப்பட்டு உயிரிழந்ததாக அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் அடிப்படையில் அவரது உடலை மறு உடற்கூராய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இன்று (மே 22) மறு உடற்கூராய்வு தொடங்கியது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டை மலையின் மீது அமைந்துள்ள ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் எம்.ஜி.ஆர் நகர் மகா மாரியம்மன் ஆலய ரத உற்சவ திருவிழா நடைபெற்றது. இதில் இன்று முக்கிய நிகழ்வான திருத்தேர் திருவிழா நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடி திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர். இதில் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
செஞ்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலையிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் சுமார் 2.00 மணி அளவில் சூறைக்காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் செஞ்சி சுற்று வட்டார கிராம பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே சமயம் இன்று செஞ்சி ஶ்ரீ கமலக்கன்னியம்மன் தேர் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஆரோவில் என்பது புதுச்சேரிக்கு அருகில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மத்திய அரசின் மேற்பார்வையிலுள்ள இந்த ஆரோவில் மதக்கோட்பாடுகள், நாட்டுப்பற்று என அனைத்தையும் கடந்து அமைதியை மட்டும் மையமாக வைத்து வாழக்கூடிய நகரமாக இருக்க அமைத்ததே ஆரோவில். பிப்.28, 1968 ஆம் ஆண்டு ஆரோவில் நகரத்தைக் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கு நாடு முழுதும் தமிழகம் மற்றும் புதுவையிலிருந்து 5000 பேர் வந்து கூடினர்.
விழுப்புரம் அருகே அனிச்சம்பாளையத்தில் இருளர் காலனி குடியிருப்பில் வசித்துவந்த சின்னத்தம்பி என்பவரது மனைவி சகுந்தலா (72). இந்நிலையில் சகுந்தலா நள்ளிரவில் கழுத்தறுத்து கொல்லப்பட்டார். மேலும், அவர் அணிந்திருந்த தலா 1 பவுன் செயின், மூக்குத்தி பறிக்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்திற்கு வந்த வளவனூர் போலீசார் உடலை கைப்பற்றி, இந்தக் கொலை நகைக்காக நடந்ததா? வேற ஏதாவது காரணமா? என விசாரித்துவருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (மே.21) மதியம் 1 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. விழுப்புரம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.