India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை மாவட்டம் வானக்கன்காட்டைச் சேர்ந்த சுரேஷ், அவரது குடும்பத்தினர் & உறவினர் முருகேசன் உட்பட 9பேர், சென்னை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது இருவேல்பட்டு பைபாஸ் சாலையில், இவர்கள் சென்ற கார் மீது, வேன் மோதி, முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியது. இதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 13 பேர் காயமடைந்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து எழும்பூர் செல்லும் விரைவு ரயில் (12654) சேவை, எழும்பூர் ரயில் நிலைய கட்டுமான பணியின் காரணமாக செப்.11ம் தேதி முதல் நவ.10ம் தேதி வரை தற்காலிக இடை நிறுத்தம் செய்து தாம்பரம் ரயில் நிலையம் வரை இயக்கப்படுகிறது. இந்த செய்தியை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது, அதற்கேற்றாற் போல் திட்டமிட்டு பயணிக்கவும் தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் உள்ள சித்தலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 75 வயதான ராஜேந்திரன், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். நேற்று முன்தினம் திருப்பாச்சனூர் சவுக்குத் தோப்பில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த திடீர் சம்பவத்தால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
கரியமில வாயு உமிழ்வு, புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட காரணங்களால், 2100-ஆம் ஆண்டில் தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கடல் மட்டம் உயரும் என அண்ணா பல்கலை. பேராசிரியர் ஆ. ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் கடல் மட்டம் 52.40 செ.மீ. உயர வாய்ப்புள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில், அண்ணா, பெரியார் பிறந்தநாளை முன்னிட்டுப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டி நடத்தப்பட உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு செப்.9, 10 தேதியில் முருங்கப்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு செப்.11 விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெறுகிறது. முதல் பரிசு ரூ.5,000, 2ம் பரிசு ரூ.3,000, 3ம் பரிசு ரூ.2,000 வழங்கப்படும்
விழுப்புரத்தில் பாஜக மகளிரணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றபோது, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாது என போலீசார் தெரிவித்தனர். ஏற்கனவே அனுமதி பெற்றதாகக் கூறிய பாஜகவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 32 பாஜகவினரை போலீசார் கைது செய்து, பின்னர் மாலையில் விடுவித்தனர்.
புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு, இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில், விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரி மாநில மதுபான பாட்டில்களை இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த மீனாட்சி என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் இருந்து 90 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பௌர்ணமியை முன்னிட்டு, விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்குச் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, செப்.7 காலை 10.10 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் முற்பகல் 11.45 மணிக்குத் தி.மலை சென்றடையும். எதிர்வழித்தடத்தில், திருவண்ணாமலையில் இருந்து பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்படும் ரயில் பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டிவனம் நகராட்சியில் பட்டியலின பணியாளர் ஒருவரை திமுகவினர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். சம்பந்தப்பட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்து, சட்டப்படி தண்டனை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
விழுப்புரம் மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு & மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கும், பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையில் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (044-27426055) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.
Sorry, no posts matched your criteria.