India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டிவனம் அடுத்த சிங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (33). இவர், கடந்த மே மாதம் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து, திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்தனர். இந்த நிலையில், நேற்று எஸ்.பி. தீபக் சிவாஜி பரிந்துரை பேரில், மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவின்படி, ராஜசேகரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, விக்கிரவாண்டி அருகே வி.சாலை பகுதியில் நாளை நடைபெற இருக்கிறது. இந்நிலையில், “நடிகர் அஜித்தின் ரசிகர், விஜய்யின் தொண்டர்” என குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ள பேனர் ஒன்று சமூக வலைதளங்கள் கவனம் பெற்றுள்ளது. ரசிகர்களாக அடித்துக் கொண்டவர்கள் அரசியலில் ஒன்று சேர்ந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?
விக்கிரவாண்டியில் த.வெ.க. மாநில மாநாடு நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாநாடு நடைபெறும் நாளில், சென்னையிலிருந்து திருச்சி செல்லும் வாகனங்கள் திண்டிவனத்தில் மாற்றி விடப்படுவதாகவும், திருச்சியிலிருந்து சென்னை செல்லும் வாகனங்கள் செஞ்சியில் மாற்றி விடப்படுவதாகவும், இதன் மூலம் 15 – 20 கி.மீ வரை பயண நேரம் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் நாளை தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தவெக மாநாட்டு திடலில் வடக்கு மண்டல ஐஜி அஷ்ரா கார்க் தலைமையில் நேற்று கூட்டம் நடைபெற்றது. அப்போது, செங்கல்பட்டு தொடங்கி விழுப்புரம் வரையுள்ள தேசிய நெடுஞ்சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் உள்ள வீ.சாலையில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழன்னை படம், சேர, சோழ பாண்டியர்கள் உள்ளிட்ட அனைவரது கட்டவுட்டுகளும் மேடையின் அருகே வைக்கப்பட்டுள்ளது. மேலும், மற்றொருபுறம் பல்வேறு தலைவர்களின் கட்டவுட்களும் வைக்கப்பட்டுள்ளது. வருகிற ஞாயிற்றுக்கிழமை மாநாடு நடைபெற உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்துவகை பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் வட்டார வளமையங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கான குறைதீர் கூட்டம் நாளை (26.10.2024) சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம், வட்டாரக் கல்வி அலுவலகங்களில் நடைபெறுகிறது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தலைமையில் இன்று (25.10.2024) நடைபெற்றது. உடன் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் திரு.சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பிரேமலதா, நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஷோபனா, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விக்கிரவாண்டியில் தவெக முதல் மாநாடு நடைபெற உள்ள நிலையில், அக்டோபர் 4ஆம் தேதி விஜய் வெளியிட்ட அறிக்கையில் “வி.சாலை என்னும் வெற்றிச்சாலை” எனவும், அக் 8ஆம் தேதி “வி.சாலை என்னும் விவேக சாலை” எனவும், இன்று “வி.சாலை என்னும் வியூகச் சாலை” எனவும் குறிப்பிட்டுள்ளார். விஜயின் அறிக்கைகளில் வெளியிடப்பட்டுள்ள இந்த வரிகள் மக்களிடம் கவனத்தைப் பெற்றுள்ளது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அனுமதியின்றி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து, செஞ்சி நான்கு முனை சந்திப்பில், கட்சி செயலாளர்கள், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், மற்றும் செஞ்சி கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வீ.ஜெயபிரகாஷ் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அனுமதியின்றி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது செய்யப்பட்டுள்ளார். 22 புகார்கள் கொடுத்தும் விழுப்புரம் மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். அவருடன் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தர்ணாவை கைவிட மறுத்ததால் கைது செய்யப்பட்டார்.
Sorry, no posts matched your criteria.