India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து, விழுப்புரம் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புறவழிச் சாலையில் நடந்த இந்த விபத்தில், பேருந்து சாலையோரத்தில் உள்ள மரத்தின் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், பேருந்தில் பயணம் செய்த 12க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி விஷ சாராயம் அருந்தி உயிரிழந்த பிரவீன், சேகர், சுரேஷ் மற்றும் மணிகண்டன் ஆகியோர் உடல்கள் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலமாக கள்ளக்குறிச்சிக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் அடுத்த மாதம் பத்தாம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று விக்கிரவாண்டி அடுத்துள்ள குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மதுரை விநாயகம் என்கிற முன்னாள் ராணுவ வீரர் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர் 21 ஆண்டு காலம் ராணுவத்தில் பணியாற்றியுள்ளார்.
விழுப்புரம் ரயில் நிலையத்தில் உரிய ஆவணமின்றி எடுத்தவரப்பட்ட ரூ.1.33 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை எழும்பூரில் இருந்து இன்று விழுப்புரம் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் வரதராஜன் என்பவர் 2000 கிராம் தங்கத்தை உரிய ஆவணமின்றி எடுத்து வந்துள்ளார். இவரை போலீசார் கைது சுமார் ரூ.1.33 கோடி மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் யுவராஜ் ஆகியோர் இருந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக, பாமக வேட்பாளர் சி.அன்புமணி விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். வரும் ஜூலை 10ஆம் தேதி வாக்குப்பதிவு, 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. அதிமுக, தவெக போட்டியிடவில்லை என அறிவித்ததால், மும்முனை போட்டியாக இருப்பதோடு, தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக, திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் சந்திரசேகரிடம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வரும் ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 14ஆம் தேதி முதல் தற்போது வரை 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் உட்பட 8 பேர் மீது கடந்த 2012ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கில் நேற்று விசாரணை நடைபெற்றது. அப்போது, விசாரணையை இன்று(ஜூன் 19) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பொன் கௌதம சிகாமணி விடுத்துள்ள அறிக்கையில், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அன்னியூர் சிவா இன்று(ஜூன் 19) மனு தாக்கல் செய்ய இருக்கும் நிலையில் விக்கிரவாண்டி செட்டி ஈஸ்வரன் கோயில் தெருவில் பணிமனை திறக்க உள்ளதால் திமுகவினர் வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக செஞ்சி மஸ்தான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத் தலைவராக இருந்த சேகர் மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தப்பட்டது. அத்தேர்தலுக்கு செஞ்சி மஸ்தான் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். எனவே அவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
Sorry, no posts matched your criteria.