Villupuram

News February 12, 2026

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (பிப். 11) இரவு முதல் இன்று (பிப். 12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News February 11, 2026

விழுப்புரம் மக்களே கேஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு இது கட்டாயம்!

image

விழுப்புரம் மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி:<> https://myhpgas.in<<>>
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!

News February 11, 2026

விழுப்புரம்: ஃபீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

விழுப்புரம் மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். விழுப்புரம் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் -04146-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

News February 11, 2026

விழுப்புரம்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>இந்த <<>>இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News February 11, 2026

விழுப்புரத்தில் போலீஸ் வேலை கனவா..?

image

விழுப்புரம் தாலுகா காவல் நிலைய வளாகத்தில் உள்ள ஊர்க்காவல் படை வேலைக்கு விண்ணப்பங்கள் பிப்.6ஆம் தேதி முதல் வழங்கப்படுகின்றன. பிப்.14ஆம் தேதி நடைபெறும் தேர்வில் 20 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம். இதற்கு விண்ணப்பிக்க பிப்.13ஆம் தேதியே கடைசி நாள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 11, 2026

விழுப்புரம் மாவட்டத்தில் 50 தலைமை காவலர்கள் மாற்றம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் 50 தலைமை காவலர்கள் இடமாற்றம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மேற்கு காவல் நிலையம், திருவெண்ணைநல்லூர், திண்டிவனம், அவலூர்பேட்டை, செஞ்சி காவல் நிலையங்களில் பணியாற்றிய தலைமை காவலர்கள் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

News February 11, 2026

விழுப்புரம்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <>கிளிக் <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க

News February 11, 2026

திண்டிவனத்தில் பரிதாப பலி!

image

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் பிக்காஷ் தெவரி(28). இவர், திண்டிவனம் அடுத்த பாதிரி கிராமப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்றி இரவு, தண்ணீர் கேன் வாங்கிக் கொண்டு பாதிரி பகுதியில் சாலையோரம் நடந்து சென்றார். அப்போது., அந்த வழியாக வந்த பைக், பிக்காஷ் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News February 11, 2026

விழுப்புரம் கலெக்டர் அறிவித்தார்!

image

விழுப்புரம் கோட்ட விவசாயிகள் குறை கேட்கும் கூட்டம் வரும் பிப்.18ஆம் தேதி காலை நடைபெறும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் ஆர்டிஓ தலைமையில் நடைபெறும் இந்தல் கூட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, திருவெண்ணைநல்லூர், கண்டாச்சிபுரம் தாலுக்கா விவசாயிகள் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

News February 11, 2026

விழுப்புரத்தில் துடிதுடித்து பலி!

image

செஞ்சியை அடுத்த பெருங்காயப்பூர் கோட்டிக்கல், பாறை பகுதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி(50). தொழிலாளியான இவர், நேற்று முன் தினம் இரவு பெருங்கப்பூர் கூட்டுரோடு அருகே சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, செஞ்சியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற தனியார் பஸ், அவர் மீது மோதியதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது, அவர் ஏற்கனவே இறந்ததாகத் தெரிவித்தனர்.

error: Content is protected !!