India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காக்கிநாடா – புதுச்சேரி விரைவு ரயில் செப். 1ஆம் தேதி செங்கல்பட்டு ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். செப்.2ஆம் தேதி செங்கல்பட்டில் இருந்து காக்கிநாடாவுக்கு பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும். காச்சிகூடா – புதுச்சேரி விரைவு ரயில் செப்.1ஆம் தேதி செங்கல்பட்டு ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். செப்.2ஆம் தேதி செங்கல்பட்டில் இருந்து காச்சிகூடாவுக்கு பிற்பகல் 3.55 மணிக்கு புறப்படும்.
விழுப்புரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் வரும் 29ஆம் தேதி முதல் செப்.2ஆம் தேதி வரை ரயில் சேவைகள் மாற்றட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரி – விழுப்புரம் இடையேயான மெமு ரயில், இரு வழித்தடங்களிலும் செப்.1ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், திருவாரூரில் இருந்து விழுப்புரத்துக்கு மாலை 3.10 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் செப்.1ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக, அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நேற்று நடையப்பெற்றது. இதில் கலந்து கொண்ட ஆட்சியர் பழனி, “மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள பாதுகாப்பு மையங்கள், உபகரணங்கள் தயாராக உள்ளது. எனவே, அனைத்துத்துறையினரும் களப்பணிகளை மேற்கொள்ள தயாராக வேண்டும். கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்றார்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (19.08.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
“மக்களுடன் முதல்வர்” திட்டம் முகாம் நாளை (20.08.2024) வானூர் ஊராட்சி ஒன்றியத்தில் திருச்சிற்றம்பலம் ஊராட்சியிலும், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் முட்ராம்பட்டு ஊராட்சியிலும், மயிலம் ஊராட்சி ஒன்றியத்தில் தீவனூர் ஊராட்சியிலும், மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்தில் நடுக்குப்பம் ஊராட்சியிலும் நடைபெறவுள்ளது.
திண்டிவனம் அடுத்த சிங்கனூர் கிராமத்தில் நேற்று கனகராஜ் என்பவர் இறந்ததை அடுத்து இன்று அவருக்கு (ஆகஸ்ட் 19) இறுதி ஊர்வலம் நடந்துள்ளது. இந்த ஊர்வலத்தின் போது ஆறுமுகம் (51) என்பவர் பட்டாசு வெடித்துள்ளார். அப்போது அவருடைய கையிலேயே பட்டாசு வெடித்து வலது கை விரல்கள் சிதறியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக ஆக. 29ஆம் தேதி முதல் செப். 2ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. புதுச்சேரி-விழுப்புரம் இடையேயான மெமு ரயில் இரு வழித்தடங்களிலும் செப். 1ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் திருவாரூ- விழுப்புரம் செல்லும் ரயில்(06690) செப். 1 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் 808 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி அவர்கள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். உடன் துணை ஆட்சியர் அளவிலான மாவட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி அவர்கள், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை இன்று (19.08.2024) பெற்றுக்கொண்டார். உடன் தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) முகுந்தன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) சிவக்கொழுந்து உட்பட பலர் உள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி இன்று (19.08.2024) வழங்கினார். உடன் தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) முகுந்தன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு உட்பட பலர் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.