Villupuram

News August 21, 2024

காங்கிரஸ் கமிட்டியின் செயல்வீரர் கூட்டம்

image

விழுப்புரத்தில் மத்திய, வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநில தலைவர் கு.செல்வப் பெருந்தகை கலந்து கொண்டார். விழுப்புரம் மத்திய மாவட்ட தலைவர் R.T.V. சீனிவாச குமார், வடக்கு மாவட்ட தலைவர் R.P. ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், டாக்டர் எம். கே.விஷ்ணு பிரசாத் உட்பட பலர் இருந்தனர்.

News August 21, 2024

லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலர் கைது

image

திருவெண்ணைநல்லூரில் சேட்டு என்பவரிடம் வீட்டுமனை பதிவிற்கு தடையின்மை சான்றிதழ் வழங்க, இன்று அவரிடம் இருந்து 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை தி.வெ.நல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் வாங்கியுள்ளார். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 21, 2024

விழுப்புரத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று 21 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் மதியம் 1 மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

News August 21, 2024

விழுப்புரம் அருகே நாளை மின்தடை அறிவிப்பு 

image

செண்டூர் துணை மின் நிலையத்தில் நாளை (ஆகஸ்ட் 22) பராமரிப்பு பணிகள் ஒளவையார்குப்பம் , கூட்டேரிப்பட்டு, கீழ் எடையாளம், சின்ன நெற் குணம், முப்புளி , கொடிமா , செண்டூர், ஆலகிராமம், நாகந்துார் , மரூர், கொத்த மங்கலம், பேரணி, பாலப் பட்டு, நெடி மொழியனுார் , விளங்கம்பாடி, வீடூர், பாதிராப்புலியூர், மயிலம், தழுதாளி, பெரும்பாக்கம், திருவக்கரை பகுதியில் மின் வினியோகம் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

News August 21, 2024

விழுப்புரத்தில் சோழர் கால கோவில்

image

சென்னை – விழுப்புரம் நெடுஞ்சாலையில் உள்ள திருவாமாத்தூரில் 1,500 ஆண்டுகள் பழமையான சோழர்கள் காலத்து கோயில் அமைந்துள்ளது. இது அபிராமேஸ்வர் கோயில் என்றும், அம்மன் முத்தாம்பிகை கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோயிலில் 7 அடுக்கு கோபுரம் இருப்பது கவனிக்க வேண்டிய ஒன்று.விழுப்புரத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் திருக்கோயிலூர் சாலையில் இக்கோயில் அமைந்துள்ளது.

News August 20, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (20.08.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News August 20, 2024

அரசு விழாவில் அமைச்சர் பெயர் புறக்கணிப்பு

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்திற்கு உள்ளே அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஊராட்சி கட்டிடத்தின் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் விழுப்புரம் மாவட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான் பெயர் அழைப்பிலும், கட்டிடப் பணி முடிக்கப்பட்ட கல்வெட்டிலும் இடம்பெறவில்லை. இதனால் சில கவுன்சிலர்கள் அதிருப்தியில் நிகழ்ச்சியை புறக்கணித்ததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

News August 20, 2024

புதுச்சேரி ரவுடியை சுற்றி வளைத்த டி.எஸ்.பி.

image

கிளியனூரில் கடந்தா 2017ஆம் நடந்த குற்றச் சம்பவத்தில், புதுச்சேரியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜோசப் மணிகண்டன்(34) சிறையில் அடைக்கப்பட்டார். 3 கொலை வழக்கில் தொடர்புடைய இவர், ஜாமீனில் வெளியே வந்து விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்துள்ளார். இதையடுத்து, வானூர் கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில், நேற்றிரவு கோட்டக்குப்பம் டி.எஸ்.பி. சுனில் ஜோசப்பை சுற்றி வளைத்து கைது செய்தார்.

News August 20, 2024

விழுப்புரத்தில் பெய்த மழையின் அளவு

image

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம் பகுதியில் 6 செ.மீ மழைப்பொழிவும், கெடார், முகையூர் பகுதியில் தலா 4 செ.மீ மழைப்பொழிவும், திருவெண்ணெய்நல்லூரில் 3.5 செ.மீ மழைப்பொழிவும், சூரப்பட்டு, மணம்பூண்டி பகுதியில் தலா 2 செ.மீ மழை பொழிவும் பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 20, 2024

விழுப்புரத்தில் ரயில் சேவைகள் ரத்து 3/3

image

எழும்பூர் – புதுச்சேரி மெமு ரயில், ஆக.31ம் செப்.1 தேதிகளில் முண்டிப்பாக்கத்துடன் நிறுத்தப்படும். திண்டுக்கல் – விழுப்புரம் விரைவு ரயில், ஆக.31, செப்.2 ஆகிய தேதிகளில் விருதாச்சலத்துடன் நிறுத்தப்படும். திருப்பதி – புதுச்சேரி மெமு விரைவு ரயில், ஆக.31, செப்.2 ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டியுடன் நிறுத்தப்படும். காட்பாடி – விழுப்புரம் மெமு ரயில், செப்.1ஆம் தேதி வெங்கடேஷபுரத்துடன் நிறுத்தப்படும்.

error: Content is protected !!