Villupuram

News July 9, 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை வாக்குப்பதிவு

image

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல், நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், 1355 பேர் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 276 வாக்குச்சாவடிகள், 1,16,962 ஆண் வாக்காளர்கள், 1,20,040 பெண் வாக்காளர்கள், 29 திருநங்கைகள் வாக்களிக்க உள்ளனர் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் செய்து வருகிறார். காவலர்கள் மற்றும் ரிசர்வ் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

News July 8, 2024

2 முறை இடைத்தேர்தலை சந்தித்த தொகுதி விக்கிரவாண்டி

image

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு திமுகவைச் சேர்ந்த ராதாமணி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். உடல்நல கோளாறு காரணமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து அப்போது ஒரு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டு திமுகவைச் சேர்ந்த புகழேந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தற்போது உயிரிழக்கவே மீண்டும் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

News July 8, 2024

விக்கிரவாண்டி தொகுதி எப்போது உருவானது?

image

கடலூர் மற்றும் விழுப்புரம் ஒருங்கினைந்து தென்னாற்காடு மாவட்டமாக இருந்தபோது விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி 1951ஆம் ஆண்டு உருவானது. பிறகு தொகுதி மறுசீரமைப்பு காரணமாக 1967 வளவனூர் தனி தொகுதியாக்கப்பட்டது. 1977ஆம் ஆண்டு வளவனூர் தொகுதி மறைந்து கண்டமங்கலம் தனி தொகுதியானது. பிறகு மீண்டும் தொகுதி மறுசீரமைப்பு காரணமாக 2011ஆம் ஆண்டு விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியானது.

News July 8, 2024

விக்கிரவாண்டியில் ஓய்ந்தது

image

விக்கிரவாண்டியில் தொகுதியில் 20 நாட்கள் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இத்தொகுதியில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் அன்புமணி, நாதக சார்பில் அபிநயா போட்டியிடுகின்றனர். இங்கு வரும் ஜூலை 10 வாக்குப்பதிவு, ஜூலை 13 வாக்கு முடிவு வெளியாகிறது. மேலும், வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் உடனடியாக விக்கிரவாண்டியில் இருந்து வெளியேற தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

News July 8, 2024

விக்கிரவாண்டியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது. விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மற்றும் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு ஜூலை 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் சி.பழனி அவர்கள். மேலும், வாக்களிக்க ஏதுவாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், அன்றைய தினம் யாரும் நிறுவனங்களை இயக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

News July 8, 2024

விக்கிரவாண்டியில் இறுதிகட்ட பரப்புரை

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இங்கு திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் அன்புமணி, நாம்தமிழர் சார்பில் அபிநயா போட்டியிடுகின்றனர். தேர்தல் பரப்புரை சற்று நேரத்தில் ஓயவுள்ளதால், அன்புமணி, உதயநிதி, சீமான் ஆகியோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

News July 8, 2024

இறுதிக்கட்ட பரப்புரையில் திமுக, பாமக, நாதக

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளதால், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக, பாமக, நாதக வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாலை 6 மணியுடன், தொகுதிக்கு வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சியினரும் தொகுதிக்குள் இருக்கக் கூடாது. அவர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

News July 8, 2024

விக்கிரவாண்டிக்கான திட்டங்கள்; முதல்வர் அறிக்கை

image

விக்கிரவாண்டியில் 3.89 கோடி முறை மகளிர் இலவச பேருந்து பயணம் மேற்கொண்டுள்ளனர். 53,375 பேர் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1,000 பெறுகின்றனர். ரூ.8.50 கோடி நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு 1,633 குடும்பங்கள் பயன் அடைந்துள்ளனர். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் விக்கிரவாண்டியில் 80,929 பேர் பயன் அடைந்துள்ளனர். 10,651 மாணவர்கள் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் பயன் பெற்றனர்.

News July 8, 2024

இபிஎஸ்-க்கு மக்களை சந்திக்க பயம்

image

எடப்பாடி பழனிசாமிக்கு மக்களை சந்திக்க பயம் என அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார். விக்கிரவண்டியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், இபிஎஸ்-க்கு மக்களை பார்த்தும் பயம், பாஜகவை பார்த்தும் பயம். அதனால்தான் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளார். பாஜகவிற்கு வழிவிட்டு, விக்கிவண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது என கடுமையாக சாடினார். பின்னர், திமுக அரசு செய்த சாதனைகளைக் கூறி அன்னியூர் சிவாவுக்கு வாக்கு சேகரித்தார்.

News July 8, 2024

வாக்குறுதி அளித்தார் அமைச்சர் உதயநிதி

image

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடைபெறும் நிலையில், திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இன்று காலை தும்பூர் கிராமத்தில் அன்னியூர் சிவாவை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், அன்னியூர் சிவா வெற்றி பெறும் நிலையில், நந்தன் கால்வாய் திட்டம் சீரமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

error: Content is protected !!