India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. தேர்தல் அமைதியாக நடக்க, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 276 வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை நடைபெறும் என்பதால் வாக்காளர்கள் தவறாமல் ஜனநாயக கடமையை ஆற்றுங்கள் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நாளை விக்கிரவாண்டி சட்டமன்றத் தேர்தல் வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் நேற்றோடு பிரச்சாரம் முடிவுற்றது. தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த விக்கிரவாண்டி தொகுதி பாமக வேட்பாளர் அன்புமணி இன்று மாலை திடீர் உடல்நல கோளாறு காரணமாக விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் உடல்நிலை தேதி வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
75.விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், வாக்கு எண்ணும் மையத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளை அறிந்துகொள்ளும் விதமாக கண்காணிப்பு கேரமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி, அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு பதிவு செய்யும் இயந்திரங்கள் அனுப்பும் பணி விக்கிரமாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கியது. இந்த பணியினை, மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் மேற்பார்வையில் அனைத்து வாக்கு மையங்களுக்கும் வேன் மூலமாக இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டன. அதேபோல், பணம் பட்டுவாடா நடைபெறுகிறதா என கண்காணிக்கப்பட்டு வருகிறது.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் திலீப் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படத்துடன் கூடிய பூத் ஸ்லிப்பைப் பயன்படுத்தி வாக்காளர்கள் வாக்களிக்கலாம். அப்படி பூத் சிலிப் இல்லாதவர்கள், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் பான் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட 12 ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்கு கடந்த 14ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்கிய நிலையில் 24ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. மொத்தம் 64 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 35 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 26ஆம் தேதி இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போதைய சூழலில் 29 வேட்பாளர்கள் விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் களம் காண்கின்றனர்.
மக்களவைத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் சௌமியா அன்புமணியை எதிர்த்து போட்டியிட்ட அபிநயாவும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, தேர்தல் களத்தில் திமுக, பாமக, நாதக என மும்முனை போட்டி உருவானது. இதனால், தங்கள் வேட்பாளரை ஆதரித்து கடந்த சில நாட்களாக, கட்சி தலைவர்கள் பலர் தெரு தெருவாக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா களமிறங்குகிறார். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தேர்தலில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பணபலம், ஆளுங்கட்சி அராஜகம் உள்ளிட்டவற்றால் தேர்தலை புறக்கணிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். அதே நேரத்தில் வன்னியர் வாக்குகள் அதிகம் இருப்பதால் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் என அறிவித்தார் ராமதாஸ்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், இறுதி நேரத்தில் பண பட்டுவாடா உள்ளிட்ட தேர்தல் விதி மீறல்கள் குறித்து கண்காணிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்திருக்கிறது. மேலும், துணை ராணுவம், காவல்துறையினர் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்த நிலையில், நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்கு பதிவு இயந்திரம், பென்சில், பேனா, மை உள்ளிட்ட 111 பொருட்கள் விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளது. இவை அனைத்தும் இன்று வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல், வாக்கு மையங்கள் அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.