India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (04.09.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள சமுதாய அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிக்கு விண்ணப்பிப்போர், 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவராகவும், கணினி இயக்கவும் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். வரும் 10ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நகர்ப்புற மையத்தில் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வாகியுள்ள ஆசிரியர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில், காங்கியனூர் ஊராட்சி பள்ளி மரிய ஜோசப், கணக்கன்குப்பம் ஊராட்சிப் பள்ளி சையது இஸ்மாயில், கோலியனூர் ஊராட்சிப் பள்ளி தலைமை ஆசிரியை மாதவி, மேல்களவாய் ஊராட்சி பள்ளி வசந்த், திண்டிவனம் ஆறுமுகம், விழுப்புரம் பாஸ்கரன், மரக்காணம் புனிதா, கோலியனூர் கோவிந்தன் உள்ளிட்ட 8 பேர் தேர்வாகியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கப்பூரைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 22 வயது இளம்பெண்ணுக்கு, கல்பட்டு பகுதியைச் சேர்ந்த நிதிஷ் குமார், ராமச்சந்திரன் ஆகியோர் இந்திரா நகர் முள்தோப்புக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இருவரையும் தேடி வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நடத்த 85 ஏக்கர் இடம் தேர்வு செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. மாநாடு நடத்துவது குறித்து, காவல்துறை தரப்பில் 21 கேள்விகள் கேட்டுள்ளது. இதுகுறித்து கடிதம் அனுப்பப்பட்ட நிலையில், அதற்கான பதில் அறிக்கை இன்று கட்சி சார்பில் காவல்துறையிடம் வழங்கப்பட உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (03.09.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் சிறப்பான வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த முன்னால் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.6000 வழங்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீரர் வீராங்கனைகள் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை இந்த இணைதளத்தின் www.sdat.tn.gov.in மூலம் விண்ணப்பிக்கலாமம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம், மேல்பாக்கம் கோவிந்தசாமி அரசு கலை கல்லூரியில் கடந்த ஆண்டு வரை 2 ஷிப்டுகளாக வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில், இந்தாண்டு ஒரே ஷிப்டாக மாற்றப்பட்டது. இதனை எதிர்த்து மாணவர்கள் நேற்று முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆதரவு தெரிவித்து இன்று பேராசிரியர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், போலீசாரின் பேச்சுவார்த்தைக்குப் பின்னும் போராட்டம் தொடர்ந்தது.
விழுப்புரம் மாவட்ட கராத்தே வீரர், வீராங்கனைகள் உலக அளவிலான கராத்தே போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். விழுப்புரம் மாவட்ட தலைமை கராத்தே பயிற்சியாளர் ரகுராமன், தலைமையில் ஆகஸ்ட் 23 to 25 தேதியில் மைசூரில் நடைபெற்ற 27வது தேசிய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் விழுப்புரம் மாவட்ட வீரர்,வீராங்கனைகள் 5 தங்கம் 2 வெள்ளி ஒரு வெண்கலம் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
திண்டிவனம் அடுத்த சிங்கனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி மகன் ராஜசேகர்(33). கூலித் தொழிலாளியான இவருக்கு ஏற்கெனவே திருமணம் ஆனது. இவர், அதேப் பகுதியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலிப்பதாக கூறி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில், சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்த புகாரின் பேரில், திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராஜசேகரை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.