India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு விரைவில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளதால், விழுப்புரம் மாவட்டத்தில் உரிமம் பெற்ற படைக்கலன்கள் (துப்பாக்கிகள்) வைத்திருப்பவர்கள், தங்கள் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் உடனடியாக ஒப்படைக்குமாறு இன்று (பிப்.18) காலை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில், இளநிலை பொறியாளர்கள் உதவி பொறியாளர்கள் நிலையில் பணியாற்றி வரும் 24 பேர் மாவட்டத்திற்குள் கண்டமங்கலம், செஞ்சி, கோலியனூர், மரக்காணம், திண்டிவனம், மேல்மலையனூர், முகையூர் உள்ளிட்ட வெவ்வேறு இடங்களில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் பிறப்பித்துள்ளார்.

விழுப்புரம் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <

விழுப்புரம் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <

முருக்கேரியில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட னர். அப்போது மரக்காணத்தில் இருந்து பிரம்மதேசம் நோக்கி ஸ்கூட்டரில் வந்த வாலிபரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அந்த ஸ்கூட்டரில் 60 புகையிலை பாக்கெட்டுகள் இருந்தன. விசாரணையில், அவர் வன்னிப்பேர் கிராமத்தை சேர்ந்த சூரியமூர்த்தி மகன் பிரசாந்த் (32) என்பது தெரிந்தது. இதையடுத்து பிரசாந்தை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மரக்காணத்திலிருந்து பிரம்மதேசம் நோக்கி வந்த ஸ்கூட்டரில் வேகமாக வாலிபர் வந்தார். அந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது பிரசாத் என்ற வாலிபர் புகையிலை பொருட்களை விற்பனைக்காக கடத்திச் செல்வது தெரியவந்தது. தொடர்ந்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டை சேர்ந்தவர் இளங்கோவன், இவர் கடந்த 7ஆம் தேதி சைக்கிளில், வீடூர் அணை அருகே சென்ற போது நிலைதடுமாரி கீழே விழுந்தார். அவரின் வீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இவர் உயிரிழந்தார் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (பிப். 17) இரவு முதல் இன்று (பிப். 18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (பிப். 17) இரவு முதல் இன்று (பிப். 18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.