Vellore

News November 1, 2024

வேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி விபரம்

image

வேலூர் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (நவம்பர் 01) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டது பகுதிகளாக ரோந்து பணி நடைபெறுகிறது ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்

News November 1, 2024

வேலூர் அருகே விபத்து; மரணம்

image

குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (42). இவர் நேற்று தனது வீட்டிலிருந்து பஸ் நிறுத்தம் அருகே உள்ள கடைக்கு பைக்கில் சென்றார். அப்போது அவர் பைக்கில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார்‌. இதையடுத்து ராஜேஷை அப்பகுதி மக்கள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 1, 2024

வேலூர் டாஸ்மாக் கோட்டத்தில் 6.75 கோடிக்கு மது விற்பனை

image

தீபாவளி பண்டிகையொட்டி டாஸ்மாக் கடைகளில் நேற்று கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் டாஸ்மாக் கோட்டத்தில் உள்ள 104 கடைகளில் நேற்று (அக்டோபர் 31) ஒரே நாளில் 6.75 கோடி ரூபாய்க்கு மது பானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக டாஸ்மாக் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

News November 1, 2024

காட்பாடி ரயிலில் இருந்து தவறி விழுந்த போலீசார் பலி

image

சென்னை காவல்துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் செந்தில்குமார் (55) என்பவர் இன்று காலை காட்பாடியில் இருந்து சென்னை செல்வதற்காக மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் நடைமேடையில் ஏறாமல் எதிர் திசையில் இருந்து ஏறி உள்ளார். இதில் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காட்பாடி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 1, 2024

வேலூர் மக்களே உங்க கொண்டாட்டம் எப்படி இருந்தது?

image

தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள், காலையிலே எண்ணேய் தேய்த்து குளித்தும், பலகாரங்கள் செய்து அதை உற்றார் உறவினர்களுக்கு கொடுத்தும், அறுசுவை உணவு சாப்பிட்டும், புத்தாடைகள் அணிந்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும், திரையரங்குகளில் பலர் புதுப்படங்களை கண்டு ரசித்து தீபாவளியை சிறப்பாக கொண்டாடினர். இதில், உங்களை மகிழ்வித்தது எது? COMMENT பண்ணுங்க.

News November 1, 2024

அனைத்து அஞ்சலகங்களிலும் இன்று சிறப்பு முகாம்

image

மத்திய மாநில அரசுகளின் ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம். டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் அருகில் உள்ள அஞ்சலகம் அல்லது https://ccc.cept.gov.in/ServiceRequest/request.aspx என்ற இணையதள முகவரியில் கோரிக்கையை பதிவு செய்யலாம். இதற்காக அனைத்து அஞ்சலகங்களிலும் இன்று (நவ-1) முதல் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News November 1, 2024

வேலூர் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி

image

தமிழ் வளர்ச்சி துறை சார்பில் வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப் போட்டி நவ-12 ஆம் தேதி காட்பாடி அரசு கல்வியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் மாணவர்கள் இதற்கான படிவத்தை பூர்த்தி செய்து பள்ளித் தலைமையாசிரியர் பரிந்துரையுடன் தமிழ் வளர்ச்சி துணை இயக்குனரிடம் வழங்கி பங்கேற்கலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News October 31, 2024

வேலூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

வேலூர் மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 31) அடுத்த மூன்று மணி நேரத்திற்கு அதாவது இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 28 மாவட்டங்களுக்கும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூரில் மழை வருமா?.

News October 31, 2024

அதிமுக மாவட்ட செயலாளர் தீபாவளி வாழ்த்து

image

வேலூர் அதிமுக மாவட்ட கழக செயலாளர் வேலழகன் தனது சமூக வலைத்தளத்தில் இன்று (அக்.31) தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், அனைவரது வாழ்விலும் இருள்நீக்கி ஒளி பிறக்கவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விட்டு உங்கள் உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும் என தனது தீபாவளி வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

News October 31, 2024

வெடி விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டியவை

image

பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏதேனும் ஏற்பட்டால் முதலுதவியாக காயம்பட்ட நபரை காற்றோட்டமான இடத்திற்கு அழைத்துச் சென்று காயம் ஏற்பட்ட இடத்தில் குளிர்ந்த நீரை ஊற்றலாம். மேலும், பருத்தி துணியை நனைத்து காயம்பட்ட இடத்தை மூடலாம். பெரிய அளவில் காயம் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவரை அணுகவும். மருத்துவர் பரிந்துரையின்றி தாங்களாகவே ஏதும் செய்ய வேண்டாம்.

error: Content is protected !!