Vellore

News January 1, 2025

வேலூர் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (ஜன. 01) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் செய்யவும்.

News January 1, 2025

டாஸ்மாக் கடைகளில் 4.75 கோடிக்கு மது விற்பனை

image

வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் 105 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் சாதாரண நாட்களில் ரூபாய் 3 கோடி வரை விற்பனை நடப்பது வழக்கம். ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று ஒரேநாளில் ரூபாய் 4.75 கோடிக்கும் மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த ஆங்கில புத்தாண்டை விட இந்த ஆண்டு விற்பனை குறைவு என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

News December 31, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (டிசம்பர் 31.12.2024) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.

News December 31, 2024

காட்பாடி அருகே வாலிபர் தற்கொலை போலீசார் விசாரணை

image

காட்பாடி தாலுகா கழிஞ்சூர் ஓடையில் உள்ள மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கு போட்ட நிலையில் சடலமாக கிடப்பதாக விருதம்பட்டு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரி சோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை செய்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News December 31, 2024

அரசுக்கு எதிராக முகநூலில் பதிவிட்ட காவலர் சஸ்பெண்ட்

image

வேலூர் தாலுக்கா காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்த அன்பரசன் தனது முகநூல் பக்கத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரம் தொடர்பாக அரசுக்கு எதிராக வெளியான பதிவுக்கு ஆதரவாக தனது கருத்து பதிவு செய்துள்ளார். இது குறித்து மாவட்ட காவல் அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக அன்பரசனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவிட்டுள்ளார்.

News December 31, 2024

 புதுமைப்பெண் திட்டத்தால் 12,872 பேர் பயன்

image

வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் நேற்று புதுமைப்பெண் திட்டத்தை துவக்கி வைத்து பேசிய மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி வேலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்று உயர் கல்வி பயிலும் 11,966 மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயனடைந்து வருகின்றனர். தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் 909 மாணவிகள் பயனடைய உள்ளனர் என்றார்.

News December 31, 2024

குடியாத்தம் காவல் நிலையத்தில் எஸ்.பி. திடீர் ஆய்வு

image

குடியாத்தம் டவுன் காவல் நிலையத்தில் எஸ்.பி.மதிவாணன் நேற்று திடீர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பாலியல் தொல்லை மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான புகார்கள் வந்தால் உடனடியாக உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டார். பாலியல் புகார் தொடர்பாக மெத்தனமாக செயல்படும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

News December 31, 2024

புத்தாண்டின் போது பொதுமக்களுக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை

image

வேலூர் மாவட்டத்தில் 31ஆம் தேதி இரவு பொதுமக்கள் ஆங்கில புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் வாகன போட்டிகளில் ஈடுபடுவது, ஆபத்தான முறையில் வாகனங்களை இயக்குவது  போன்ற செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது. இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

News December 30, 2024

வேலூர் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (டிச. 29) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.

News December 29, 2024

வேலூர் மாவட்டத்தில் வரும் 4-ம் தேதி மிதிவண்டி போட்டிகள்

image

முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் வருகிற ஜனவரி 4-ம் தேதி மிதிவண்டி போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் பள்ளி மாணவர்கள் பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை அசல் மற்றும் நகலுடன் மாவட்ட விளையாட்டு அலுவலத்திற்கு நேரடியாகவோ அல்லது 74017 03483 என்ற வாட்ஸ் அப் எண்ணிலோ வரும் 3-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!