India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பவர்கள் மற்றும் கடத்துபவர்களை தடுக்க இன்று (ஜனவரி 3) மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 45 மது பாட்டில்கள், 2 லிட்டர் கள்ளச்சாராயம், 150 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் மீது மதுவிலக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட எஸ்பி மதிவாணன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் தமிழக அரசால் வழங்கப்படும் திருநங்கையருக்கான முன்மாதிரி விருதை, திருநங்கையர் தினம் என அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 15-ம் தேதியன்று ஒரு லட்சத்திற்கான காசோலை மற்றும் சான்று பெறுவதற்கு http://awards.tn.gov.in என்ற இணையதள பக்கத்தில் வருகிற பிப்ரவரி 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (ஜனவரி 3) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி காவல்நிலைய இன்ஸ்பெக்டராக ஆனந்தன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மீது பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து அவரை திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளார் போலீஸ் நிலையத்திற்கு பணியிடமாற்றம் செய்து இன்று வடக்கு மண்டல ஐஜி உத்தரவிட்டார். அதேபோல் வேலூர் எஸ்.பி தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வந்த 5 பேர் வெவ்வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காட்பாடியில் எம்.பி கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்க துறையினர் சோதனையை தொடங்கியுள்ளனர். சுமார் 7 மணி நேரம் வீட்டின் வெளியே அமலாக்க துறையினர் காத்திருந்த நிலையில், தற்போது சோதனையை தொடங்கியுள்ளனர். கதிர் ஆனந்த் வீட்டில் இல்லாததால் அவரின் அனுமதிக்காக காத்திருந்தனர். திமுகவினர் ED-ஐ சோதனையிட்ட பிறகே வீட்டிற்குள் அனுமதித்தனர்.
▶உண்ணிகளிடமிருந்து கடிபடாமல் இருப்பதுதான் முதல் தற்காப்பு. ▶தலையணை, படுக்கை விரிப்புகளை சுத்தம் செய்ய வேண்டும். ▶வீட்டை சுற்றி புதார்கள் மண்டி இருந்தால், அதனை சுத்தம் செய்ய வேண்டும். ▶உண்ணிக்கொல்லி மருந்துகளை தெளிக்கலாம். ▶மலையேற்றத்துக்கு செல்லும்போது கொசு விரட்டி, உண்ணி விரட்டிகளை தேய்த்து கொள்ளுங்கள். ▶காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு ஏற்பட்டால் மருத்துவரை அணுகுங்கள். ஷேர் பண்ணுங்க…
14 நாட்களில் காய்ச்சல், நடுக்கம், உடல் சோர்வு, உடல் வழி, இரும்பல் போன்றவை ஏற்படும். 2ஆவது வாரத்தில் நுரையீரல் தொற்று, நிமோனியா மற்றும் முளைக்கு தொற்று பரவி சுவாச செயலிழப்பு, கல்லீரலில் பாதிப்பு, மஞ்சள் காமாலை, மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும். கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் செயலிழந்து, மரணமடையும் வாய்ப்பு 30% வரை உள்ளது. இது பிரச்னைக்குரிய காய்ச்சல் என்பதை மக்கள் உணர வேண்டும். ஷேர் பண்ணுங்க.
தமிழகத்தில் ‘ஸ்கரப் டைப்ரஸ்’ என்ற பாக்டீரியா தொற்று அதிகரித்து வருகிறது. திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், விவசாயப் பகுதிகள், வன பகுதிகளில் வசிப்பவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு Azithromycin, Doxycycline போன்ற மாத்திரைகளை பயன் படுத்தலாம். இருப்பினும், மருத்துவர்களை அணுகுவது நல்லது.
வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC Group-II & IIA தேர்வுகளுக்கு பயிற்சியினை வழங்கவுள்ளது. எனவே www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பித்து பயனடையுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (ஜனவரி 2) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த டிச.9ஆம் தேதி துவங்கி டிச.23ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வுகள் நடைபெற்றன. தொடர்ந்து 24ஆம் தேதி முதல் ஜன.1ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம், வேப்ங்கனேரியில் அரையாண்டு விடுமுறைக்கு பிறகு, பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. இதில், மாணவர்கள் மகிழ்ச்சியாக பள்ளிக்கு சென்றனர்.
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தமிழக அரசுக்கு எதிராக FACE BOOK-ல் கருத்து தெரிவித்த வேலூர் கிராமிய காவல் நிலைய முதல் நிலை காவலர் அன்பரசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மாவட்ட எஸ்.பி. மதிவாணன் செய்திக்குறிப்பில், அரசுக்கு எதிராக காவலர் அன்பரசன் கருத்து பதிவு செய்துள்ளார். இது சீருடை பணி விதிகளுக்கு எதிரானது. அவர் கருத்து பதிவிட்டது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது எனத் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.