Vellore

News January 7, 2025

கே.வி.குப்பம் பள்ளி மாணவிக்கு கலெக்டர் பாராட்டு

image

கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியம், பசுமாத்தூர் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பள்ளியில் தூய்மையாக வைத்திருக்கவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து 10ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு புத்தகம் வழங்கி பாராட்டினார்.

News January 7, 2025

தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் 

image

வேலூர் எஸ்பி அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில், எஸ்பி மதிவாணன் பேசும் போது, சரித்திர பதிவேடு குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். மாவட்டம் முழுவதும் போதைப் பொருட்கள் விற்பனை, கடத்தலை தடுக்க சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

News January 7, 2025

கலைஞா் கைவினைத் திட்டத்தில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

image

வேலூர் மாவட்டத்தில் கலைஞர் கைவினை திட்டத்தின்கீழ் கடனுதவி பெற தகுதியுடைய கைவினைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி அறிவித்துள்ளார். கலை, கைவினை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ரூ.3 லட்சம் வரை பிணைமில்லாமல் கடனுதவி வங்கிகள் மூலம் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு 0416-2242512, 2242413 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

News January 7, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (ஜனவரி 06.01.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.

News January 6, 2025

தங்க கம்மலை உரியவரிடம் வழங்கிய நகராட்சி ஊழியர்கள்

image

குடியாத்தம்,13-வது வார்டு எம்.ஜி.ஆர் நகரில் 7-மாதத்திற்கு முன் கழிவுநீர் கால்வாயில் விழுந்து காணாமல் போயிருந்தது. இந்தநிலையில் நகராட்சி பணியாளர்கள் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணியில் செய்து கொண்டிருக்கும் போது, சதீஷ் என்பவர் கையில் கிடைத்தது, அதை நேர்மையான முறையில் இன்று குடியாத்தம் நகர் மன்ற தலைவர் எஸ்.சௌந்தர்ராஜனிடம் வழங்கினார். உடன் நகர உறுப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News January 6, 2025

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் அறிவியல் கண்காட்சி

image

காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் வரும் ஜனவரி 21-ம் தேதி முதல் 24 வரை அறிவியல் கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளை சார்ந்த இளநிலை முதுநிலை ஆராய்ச்சி மாணவர்களும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளி மாணவர்களும், தங்களுடைய அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தலாம் என திருவள்ளுவர் பல்கலை கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

News January 6, 2025

வேலூர் மாவட்ட இளைஞர்களுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

வேலூர் மாவட்டத்தை சார்ந்த தகுதி வாய்ந்த இளைஞர்கள் அக்னிவீர் வாயு விமானப்படை தேர்வில் பங்கு பெற்று பயனடையுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (ஜனவரி 6) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு https://airmanselection.cdac.in/ என்ற இணையதளத்தில் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் அணுகி அறிந்து கொள்ளலாம் என தெரிவித்தார். இதை SHARE செய்யுங்கள்.

News January 6, 2025

வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 13,09,553 வாக்காளர்கள்

image

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் சுப்புலட்சுமி அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று (ஜனவரி 6) வெளியிட்டார். இதில் வேலூர் மாவட்டம் முழுவதும் ஆண்கள் 6,31,216 பேர், பெண்கள் 6,78,153 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் 184 பேர் என‌ மொத்தம் 13,09,553 பேர் வாக்காளர்களர்களாக இடம் பெற்றுள்ளனர்.

News January 6, 2025

வேலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட ஆட்சியர்

image

வேலூர் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்கு பதிவு இயந்திர கிடங்கில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான சுப்புலெட்சுமி இன்று (ஜனவரி 6) 2025 இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் தேர்தல் பிரிவு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News January 6, 2025

அணைக்கட்டு பகுதியில் குணச்சித்திர நடிகர் மரணம்

image

அணைக்கட்டு அடுத்த அப்புக்கல் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (75). இவர் சினிமாவில் கருத்தம்மா படத்தில் தொடங்கி ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் 100க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். இவர் சமீப காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று உயிரிழந்தார். அவரது உடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

error: Content is protected !!