India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று ( ஜன.,8 )நடத்திய சோதனையில், 83 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இது தொடர்பாக 03 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.
கே.வி. குப்பம் அடுத்த நாகல் கிராமத்தைச் சேர்ந்த விட்டல் குமார் என்பவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சந்தோஷ் குமார், பாலா சேட், தரணி குமார், கமல் தாசன், ஆகியோர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் பரிந்துரைத்தார். அதன்பேரில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று குண்டர் சட்டத்தில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கும் உத்தரவு ஆணையை பிறப்பித்தார்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் 600 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 600 பேர் மீது வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்திய சிறையில் காசநோய் கண்டறியும் முகாம் இன்று (ஜனவரி 8) நடந்தது. இந்த முகாமை சிறை கண்காணிப்பாளர் தர்மராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட காச நோய் துணை இயக்குனர் ஜெயஸ்ரீ, சிறை மருத்துவர் டாக்டர் பிரகாஷ் ஐயப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சிறைவாசிகளுக்கு காசநோய் கண்டறியும் பரிசோதனைகள் செய்தனர்.
சோளிங்கர் டவுன் வாலாஜா ரோட்டில் ரமேஷ் (வயது 52) என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் தனது கடையில் மது அருந்த அனுமதி வழங்கியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடையில் போலீசார் சோதனை நடத்தி மது விற்பனை செய்ததை உறுதி செய்தனர். அதைததொடர்ந்து ரமேஷை கைது செய்தனர். மேலும் தாசில்தார் செல்வி, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் அந்த கடைக்கு சீல் வைத்தனர்.
கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (56) இவர் பஸ் நிறுத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது காட்பாடியில் இருந்து குடியாத்தம் நோக்கி சென்ற பைக் ரமேஷ் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து கே.வி.குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவுத் திட்டத்தின் கீழ் 35% அல்லது ரூ.3.50 இலட்சம் இவற்றில் எது குறைவானதோ அத்தொகை மானியத்துடன் கூடிய வங்கிக்கடனுடன் வழங்கப்படும்.
தாட்கோ இணையதள முகவரியில் (http://newscheme.tahdco.com) விண்ணப்பம் செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணாக்கர்களுக்கு கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் ஜன 21, 22 ஆம் தேதி அரசு கல்வியியல் கல்லூரியில் நடைபெற உள்ளன. போட்டிகளில் பங்கேற்பு உள்ள மாணவர்கள் அந்தந்தப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் கல்லூரி முதல்வரை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று செய்தி குறிப்பு தெரிவித்துள்ளார்
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஜனவரி 7) நடத்திய சோதனையில் 4 கிலோ கஞ்சா, 3 கிலோ குட்கா பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியம், பசுமாத்தூர் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பள்ளியில் தூய்மையாக வைத்திருக்கவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து 10ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு புத்தகம் வழங்கி பாராட்டினார்.
Sorry, no posts matched your criteria.