India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விஜய கார்த்திகேயன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஜனவரி 10) நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமரன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஹோட்டல்களில் உள்ள மதுபான பார்கள் வருகிற (ஜனவரி 15 ) திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் மது பானங்கள் விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் எஸ்.ஐ.க்கள் 2 பேர் பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் நேற்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.ஐ.யாக பணியாற்றி வந்த ராஜகுமாரி, குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலைய எஸ்ஐயாகவும், அங்கு பணியாற்றி வந்த அஜந்தா கே.வி.குப்பம் காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதியில் இன்று (09.01.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஜனவரி 9) நடத்திய சோதனையில் 25 மது பாட்டில்கள், 100 கிராம் கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு இது தொடர்பாக 2 பேர் மீது மதுவிலக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 01.10.2019 முதல் 31.12.2019 வரை பதிவு செய்து தற்போது ஐந்தாண்டுகள் முடிவு பெற்றுள்ள இளைஞர்கள் நடப்பு காலாண்டிற்கு உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க படிவங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம் அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் டெக்ஸ்டைல் தொழிலாளர் கூட்டுறவு பண்டகசாலை நியாய விலை கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (ஜனவரி 9) பார்வையிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (ஜனவரி 9) திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பள்ளி மாணவிகளிடம் கலந்துரையாடினார். பிளஸ்-2 அரையாண்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு புத்தகம் வழங்கி பாராட்டினார். இந்த ஆய்வின் போது துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம், ஏரிகுத்தி ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (09.01.2025) பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தார். அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் தூய்மையாக பராமரிக்குமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.
வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் உள்ள கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடியில் பொங்கல் பரிசு தொகுப்பை நாளை (ஜனவரி 9) காலை 9:30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி வழங்க உள்ளார் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.