India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டத்தில் இன்று (நவ 23) மற்றும் நாளை (நவ 24) ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் அட்டையில் திருத்தம், பெயர் சேர்த்தல் உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கலாம். மேலும், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டமும் நடைபெறுகிறது. வேலூர் மாவட்ட மக்கள் கலந்து கொண்டு பயன்பெறவும்.
வேலூர், காட்பாடி, குடியாத்தம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. இப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (நவம்பர் 22) பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, பேர்ணாம்பட்டு நகர்மன்ற துணைத்தலைவர் ஆலியார் ஜீபேர் அஹமத், பேர்ணாம்பட்டு ஒன்றிய குழுத்தலைவர் சித்ரா ஜனார்த்தனன், நகராட்சி ஆணையர் வேலவன் உட்பட பலர் உடனிருந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும் www.voters.eci.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ளலாம். எனவே பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நாளை (நவம்பர் 23) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்கள், மகளிர் சுய உதவி குழுக்களை கௌரவிக்கவும், பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து விவாதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இக்கூட்டத்தை கண்கானிக்கசிறப்பு மேற்பார்வையாளர்களை நியமனம் செய்து கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் வரும் டிசம்பர் -1 ம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் ( ஹெல்மெட்) அணிய வேண்டும். இல்லை என்றால் 1000 ரூபாய் அபராதம் (Spot Fine) விதிக்க வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து தற்போது வேலூரில் முக்கிய பகுதிகளில் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விண்ணப்பங்கள் வரும் டிசம்பர் 20-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என நேற்று(நவ 21) வெளியிட்ட தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு வரும் நவம்பர் 23-ம் தேதி வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபா கூட்டம் நடத்த வேண்டும் என்று அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். மேலும் கிராமசபா கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள், சிறப்பு மேற்பார்வையாளர்களை நியமித்து உத்தரவிட்டார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நாளை நவம்பர் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களாக வழங்கலாம் என கலெக்டர் சுப்புலெட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.