India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அணைக்கட்டு புதூர் கிராமத்தை சேர்ந்த கவூர்கான் மினிவேன் டிரைவர். இவர் கடந்த 11-ந் தேதி குடும்பத்துடன் வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 4 சவரன் நகைகள், 80 கிராம் வெள்ளி பொருட்கள் திருட்டுபோய் இருந்தது. இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வேலூர் மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், துணிகடைகள், நகை கடைகள், கோயில் என அனைத்து இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதையடுத்து, வேலூர் மாவட்டம் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடந்தது. இதில், மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, உதவி ஆணையர் (கலால்) முருகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர், கணியம்பாடி அடுத்த அமிர்தியில் வன உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்கா ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை விடுமுறை நாளாகும். இந்நிலையில் பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் நாளை (ஜனவரி 14) பூங்கா திறந்து இருக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூரில் அரசு பொருட்காட்சியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட பிரதான கட்சிகள் போட்டியிடாமல் புறக்கணிக்கின்றன. எதிர்க்கட்சிகள் அவ்வளவு பலமாக இருக்கிறார்கள் என்பது தான் அதற்கு அர்த்தம். பெரியாரைப் பற்றி தவறாக பேசுபவர்களின் பிறப்பை நான் சந்தேகப்படுகிறேன் என்றார்.
போகி பாண்டியான இன்று வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரிப்பது வழக்கமாக உள்ளது. இதனால் கடும் காற்று மாசு ஏற்படுகிறது. இந்த போகிக்கு பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பெயரில் துணி, பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதை விட பிழையனவாம் கோவம், வெறுப்பு களைந்து புதியனவாம் அன்பு, பாசம் வளர்ப்போம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
வேலூர் கோட்டையின் பின்புறம் கோசாலை உள்ளது. இந்த கோசாலையில் உள்ள கிணற்றில் கண்ணாடி விரியன் பாம்பு எதிர்பாராத விதமாக விழுந்து வெளியே வர முடியாமல் தவித்தது. இதைக்கண்ட கோசாலை நிர்வாகிகள் வேலூர் வனச்சரக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனக்காப்பாளர்கள் பாம்பு பிடிக்கும் நபருடன் அங்கு சென்று கிணற்றுக்குள் தவித்த 5 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை லாவகமாக பிடித்தனர்.
வேலூர் மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதியில் இன்று (12.01.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
ஒதியத்தூர் அடுத்த தாங்கல் அருகே பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கிஷோர் என்பவர் இருசக்கர வாகனத்தில் மலைகண்ணிகாபுரத்தை சேர்ந்த மூதாட்டி சாரதா (69) என்பவர் மீது மோதினார். இதில் படுகாயம் அடைந்த மூதாட்டி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளார். மேலும் இது குறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.