Vellore

News November 25, 2024

வேலூர் அருகே பள்ளி மாணவர்கள் சென்ற ஆட்டோ விபத்து

image

பள்ளிகொண்டா அடுத்த விரிஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (நவ 25) மாலை பள்ளி மாணவர்கள் சென்ற ஆட்டோ மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 3 பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்துக்கு குறித்து விரிஞ்சிபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 25, 2024

இருசக்கர வாகனங்களை திருடிய 3 பேர் கைது

image

இன்று (25/11/2024) வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடிய 3 வாலிபர்களை குடியாத்தம் நகர போலீசார் கைது செய்து 31 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர். குடியாத்தம் நகர காவல்துறை ஆய்வாளர் அவர்களின் தலைமையில் போலீசார் 3 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 25, 2024

பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 629 கோரிக்கை மனுக்கள்

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று ( நவ.25 ) மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 629 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில் குமரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News November 25, 2024

பெண் குழந்தைகள் உதவித்தொகை – கலெக்டர் தகவல்

image

வேலூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை பெறுவதற்கு உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையத்தில் பதிவு செய்து பயனடையுமாறு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (நவம்பர் 25) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News November 25, 2024

விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்த ஆட்சியர்

image

வேலூர் மாவட்டத்தில் மாவட்ட குடும்பநலச் செயலகம் சார்பாக ஆண்களுக்கான இலவச புதிய, எளிய, நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை (NSV) முகாம் நடைபெறவுள்ளதை தொடர்ந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (நவம்பர் 25) ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News November 25, 2024

வேலூர் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம்

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (நவம்பர் 25) நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஆட்சியர் சுப்புலட்சுமி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News November 25, 2024

வாக்காளர் பட்டியல் திருத்தச் சிறப்பு முகாமில் 5,483 பேர் விண்ணப்பம்

image

வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (நவ.24) நடந்த வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தச் சிறப்பு முகாமில் பெயர் சேர்க்க 2,895 பேரும், நீக்கம் செய்ய 635 பேரும், திருத்தம் தொடர்பாக 1,953 பேரும் என்று மொத்தம் 5,483 பேர் விண்ணப்பங்கள் அளித்தனர். 4 நாட்கள் நடந்த சிறப்பு முகாமில் மொத்தம் 21,365 பேர் விண்ணப்பங்கள் அளித்துள்ளனர் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

News November 24, 2024

வேலூர் எஸ்பி எச்சரிக்கை

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (நவம்பர் 24) நடத்திய சோதனையில் 39 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 5 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற தொடர் குற்ற செயல்கள் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.

News November 24, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

வேலூர், காட்பாடி, குடியாத்தம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. இப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.

News November 24, 2024

லாரி மீது பைக் மோதி 2 மாணவர்கள் பலி: எஸ்பி விசாரணை

image

வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே மேம்பாலத்தில் இன்று காலை பழுதாகி நின்றிருந்த லாரியின் பின்பகுதியில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியான நிலையில் மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து நடந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

error: Content is protected !!