India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர், காட்பாடி, குடியாத்தம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அவசர உதவிக்கு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
வேலூர் மாநகராட்சி எல்லைக்குள் சாலை ஓரங்கள் மற்றும் சென்டர் மீடியத்தில் மின் கம்பங்கள் வழியே அனுமதியின்றி போக்குவரத்திற்கு இடையூறாக தொலைக்காட்சி கேபிள் மற்றும் தொலை தொடர்பு கேபிள் அமைக்க தடை செய்யப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் அதற்குண்டான செலவினத்தை அதனை நிறுவிய நிறுவனத்திடமிருந்து வசூலிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
வேப்பங்குப்பம் ஊராட்சி ரங்கப்பன்கொட்டாய் கிராமத்தில் முத்துக்குமாரன் (52) மற்றும் அசோக் குமார் (50) என்பவர்கள் தெரு விளக்கு பொருத்திய போது எதிர் பாராத விதமாக மேலே சென்ற மின்கம்பி உரசி 2 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர். இதுகுறித்து தகவல் அறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வேலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், குடியாத்தம் தரணம்பேட்டை திருவள்ளுவர் அரசு நிதி உதவி மேல்நிலைப் பள்ளியில் (30.11.2024) அன்று காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்குபெற உள்ளனர்.
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சிமொழி பயிலரங்கம் வருகிற டிசம்பர் 10, 11 ஆம் தேதி காலையிலும், ஆட்சிமொழிக் கருத்தரங்கம் 11 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கும் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற உள்ளது. எனவே அரசு ஊழியர்கள் இதில் கலந்து பயனடையுமாறு கலெக்டர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர், காட்பாடி, குடியாத்தம் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் இன்று (நவம்பர் 26) 75 வது இந்திய அரசியலமைப்பு தினம் உறுதிமொழியை அனைத்து துறை அரசு அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் எடுத்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்தையன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் நடந்த சிறப்பு முகாம்கள் மூலம் 586 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இதற்கான சிறப்பு முகாம் வேலூர் மருத்துவக்கல்லூரியில் நவ 4ஆம் தேதி நடைபெற்றது. இதில், 2,795 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 5 சதவீதம் மற்றும் அதற்கு மேல் ஊனத்தின் தன்மை கண்டறியப்பட்ட 568 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நேற்று (நவ 25) நடத்திய சோதனையில் 31 மது பாட்டில்கள், 100 கிராம் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 2 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (நவம்பர் 25.11.2024) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.