India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர், காட்பாடி, குடியாத்தம் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று ஜனவரி 26 இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டது. இதில் பகுதிகளாக ரோந்து பணி நடைபெறுகிறது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
76-வது குடியரசு தின விழாவையொட்டி வேலூர் மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 5 துணைக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் போலீசார் என மொத்தம் 915 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
பேரணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டு பகுதியில் ரவி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இன்று (25-1-2025) அதிகாலை புகுந்த 2 யானைகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள், தென்னை மரங்கள், தக்காளி பயிர் மற்றும் கேழ்வரகு உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து ரவி அளித்த புகாரின்பேரில் பேரணாம்பட்டு வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் சரகத்தில் 2021-ம் ஆண்டு 4,095 விபத்துகளில் 1,303 பேரும், 2022-ம் ஆண்டு 4,629 விபத்துகளில் 1,428 பேரும், 2023-ம் ஆண்டு 4,667 விபத்துகளில் 1,484 பேரும், 2024-ம் ஆண்டு 4,720 விபத்துகளில் 1,513 பேரும் இறந்துள்ளனர். இதில் 14 இடங்களில் பெரிய அளவில் விபத்துகள் ஏற்பட்டுள்ளது. ஓட்டுனர்களின் கவனக்குறைவினாலே அதிகப்படியான விபத்துகள் நடந்துள்ளது என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
மேல்பட்டி பகுதியை சேர்ந்த விஷ்ணு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போன நிலையில் நேற்று மேல்பட்டி அருகே விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று மாலை உடல் அடக்கம் செய்யப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், வரும் 26ம் தேதி குடியரசு தினத்தையொட்டி, ஊராட்சி தலைவர்கள் தலைமையில், சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்து விவாதிக்கப்படும். மேலும், ஒப்புதல் தீர்மானங்களும் கொண்டு வரப்படும். இதனால் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஷேர் செய்யவும்..
வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் உள்ள காந்தி சிலை அருகே தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணியை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (ஜனவரி 25) காலை 10:30 மணியளவில் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நேற்று (ஜனவரி 24) நடத்திய சோதனையில், 65 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (24.01.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் தொடர்பு எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்..
வேலூரில் ராணுவ பேட்டை என்று அழைக்கப்படும் கம்மவான் பேட்டையில் 57ஆம் ஆண்டு எருது விடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. வாடிவாசலில் 150க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப் பாய்ந்து ஓடியது. குறிப்பிட்ட நேரத்தில் இலக்கை அடைந்த கலைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சியோடு கண்டு களித்தனர்.
Sorry, no posts matched your criteria.