India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர், காட்பாடி, குடியாத்தம் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று பிப்ரவரி 15 இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியாகி உள்ளது. இதில், ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் தொடர்பு எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
காட்பாடி தாலுகா வள்ளிமலை கிரிவல பாதையில் புதிதாக கட்டப்பட்டுள்ள முனீஸ்வரன் கோவில் பகுதியில் சினிமா படப்பிடிப்பு நேற்று நடந்தது. இதில் வில்லன் நடிகரான மொட்டை ராஜேந்திரன், காமெடி நடிகரான முத்துக்காளை உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்ட காட்சிகள் படம் பிடித்தனர். சினிமா படப்பிடிப்பு நடைபெறுவதை அறிந்த கிராம பொதுமக்கள் ஏராளமானோர் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு ஆர்வமுடன் சென்று பார்த்தனர்.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். வேலூர் மாவட்டத்தில் மட்டும் 29 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <
வேலூர் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் கடத்துபவர் மற்றும் விற்பவர்களை தடுக்கும் விதமாக காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (பிப்ரவரி 13) நடத்திய சோதனையில் 563 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 4 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (பிப்ரவரி 13.02.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
வேலூர் மாவட்டம் சேண்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மாரி மகன் சஞ்ஜய் (13). இவர் இன்று மாங்காய் மண்டியில் இருந்து குடியாத்தத்திற்கு பழ லோடுகளை ஏற்றி சென்ற அசோக் என்பவரின் ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது அப்துல்லாபுரம் அருகே ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த சிறுவன் சஞ்சய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று கொணவட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது புறயோளிகள் பிரிவு, கட்டு போடும் அறை, ஊசிபோடும் அறை, கருப்பைவாய் பரிசோதனை அறை, நெபுலைசர் அறை, பதிவு செய்யும் அறை, மருந்தகம் ஆகிய இடங்களில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்களிடம் வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
குடியாத்தம் சாமியார் மலை எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் நேற்று குரங்குகள் கூச்சலிட்டவாரு இருந்துள்ளது. உடனே அங்கு சென்று பார்த்தபோது சிறுத்தை ஒன்று, குரங்கை வேட்டையாடி சென்றது தெரிந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். வனச்சரகத்தில் உள்ள காப்புக் காடுகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. உடனே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்து உள்ளது.
வேலூர் அடுத்த கேசவபுரம் கிராமத்தில் நடத்தும் 40-ஆம் ஆண்டு மாபெரும் காளை விடும் திருவிழா (பிப்.15) நடைபெற உள்ளது.இதில், வேகமாக ஓடி இலக்கை எட்டும் காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.1,00,000,இரண்டாம் பரிசு ரூ.75,000,மூன்றாம் பரிசு ரூ.55,001,நான்காம் பரிசு ரூ.45,000,ஐந்தாம் பரிசு ரூ.35,000 என 60 பரிசுகள் வழங்கப்பட உள்ளன.இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.
மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) <
Sorry, no posts matched your criteria.