India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஆயுர்வேதா, சித்தா, யுனானி ஆகிய இந்திய மருத்துவ துறைகளில் காலியாக உதவி மருத்துவ அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதிகபடியாக 59 வயது வரை இருக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் <
காட்பாடியை சேர்ந்தவர் பிரதாப், 34, தனியார் நிறுவன ஊழியர். இவரது மொபைல்போனுக்கு டெலிகிராமில் முதலீடு செய்தால், அதிக லாபம் தருவதாக ஒரு மெசேஜில் கூறப்பட்டிருந்தது. இதை நம்பி, அந்த எண்ணுக்கு 6.38 லட்சம் ரூபாயை அனுப்பியுள்ளார். பணம் திரும்ப வராததால், சந்தேகமடைந்து அந்த மொபைல்போனை தொடர்பு கொண்டபோது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த பிரதாப், போலீசில் புகாரளித்துள்ளார்.
வேலூர் காவல்துறைக்கு சட்டவிரோதமாக புகையிலை பதுக்கி இருப்பது குறித்து தகவல் வந்ததையடுத்து, அரியூர் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் நேற்று அரியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செம்பேடு பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது சுப்பிரமணி என்பவர் சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 7 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து சுப்ரமணி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காட்பாடியை அடுத்த முத்தரசி குப்பத்தை சேர்ந்த, 22 வயது பெண், வீட்டு பின்புறம் குளித்துள்ளார்.இதை அதே பகுதியை சேர்ந்த ரங்கன் பார்த்துள்ளார். இதை கவனித்த அந்த பெண், ரங்கனை தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரங்கன், உறவினர்கள் அப்பெண்ணை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பெண் அளித்தப் புகாரின்பேரில் மூவர் மீது, காட்பாடி மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் நேற்று (மார்ச் 3) மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 492 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமார், மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (மார்ச் 3.03.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளவும்.
அரசு திட்டங்களை விவசாயிகள் கால தாமதமின்றி பயன்பெற தமிழ்நாட்டில் வேளாண் அடுக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், வேலூர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 66763 விவசாயிகளில், 33645 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள விவசாயிகளை இணைக்கும் பணி சம்மந்தப்பட்ட வருவாய் கிராமத்தில் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் மார்ச் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்து பயன்பெறுமாறு வேலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சென்னை. செங்கல்பட்டில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 29 பணியிடங்கள். கணினி அறிவு, சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.12,000 – ரூ.29,380, உதவி போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.10,000 – ரூ.24,470 வரை சம்பளம். இன்றைக்குள் (மார்.3) இந்த லிங்கை <
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியில் உள்ள ஊதுவத்தி தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று (மார்ச் 2) மாலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். இச்சம்பவத்தில் 10 கோடி மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சாம்பலாகின. மேலும் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
வேலூரில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 29 பணியிடங்கள். கணினி அறிவு, சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.12,000 – ரூ.29,380, உதவி போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.10,000 – ரூ.24,470 வரை சம்பளம். நாளைக்குள் (மார்.3) இந்த லிங்கை <
Sorry, no posts matched your criteria.