India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டத்தில் வாகன உரிமையாளர்கள், தங்களது வாகனத்தின் அடிப்படை விவரங்கள் அனைத்தையும் கைப்பேசி மூலம் அறிந்து பயன் பெறலாம். இதற்கு, கைப்பேசி எண்ணை, அவர்கள் பெயரில் உள்ள வாகனப்பதிவில் சேர்த்திட வேண்டும். கைப்பேசி எண்ணை இணைக்க, வாகன பதிவு சான்றின் நகல் மற்றும் கைப்பேசி எண் குறிப்பிட்டுள்ள ஆதார் நகல் ஆகியவற்றை, தங்களது எல்லைக்கு உட்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சமர்பிக்கலாம். SHARE
கே.வி.குப்பம் அருகே ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்த சிசு உயிரிழந்தது. இதையடுத்து, மேல்சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு நடந்த சிகிச்சையில் வயிற்றில் உயிரிழந்த 4 மாத சிசு அகற்றப்பட்டது. பெண்ணின் உடல் நிலை நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு. மார்க்கெட்டிங் பிரிவில் இருக்கும் 234 ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பல்வேறு பிரிவுகளில் பொறியியல் டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க
மும்பை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 45). இவர் தன்னுடைய மனைவி சரசு, மகள் அக்ஷயா ஆகியோருடன் தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று திருவண்ணாமலைக்கு பயணம் செய்தார். ரயில் வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம் வந்தபோது சின்னத்துரைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இது குறித்து காட்பாடி ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நேற்று (பிப்ரவரி 11) நடத்திய சோதனையில் 84 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற தொடர் குற்ற செயல்கள் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (பிப்ரவரி 11.02.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியாகி உள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
தை மாத பவுர்ணமியையொட்டி வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் இருந்து இன்று (பிப்ரவரி 11) மாலை முதல் நாளை இரவு வரை வேலூரில் இருந்து 30 சிறப்பு பஸ்களும், திருப்பத்தூரில் இருந்து 25, ஆற்காட்டில் இருந்து 15 பஸ்கள் என மொத்தம் 70 பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளது. பக்தர்களின் எண்ணிக்கையை பொருத்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 105 டாஸ்மாக் கடைகள், இன்று வள்ளலார் நினைவு தினத்தையொட்டி விடுமுறை என்பதால், நேற்று ஒரே நாளில் ரூ.5.35 கோடி மதுபானங்கள் விற்பனையானதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். வழக்கமாக தினமும் ரூ.3.50 கோடி முதல் ரூ.4 கோடி வரை விற்பனை செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில், நேற்று ஒரே நாளில் ரூ.5 கோடி 35 லட்சத்திற்கு மது விற்பனை நடந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டம் முழுவதும் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் கடத்துபவர்கள், விற்பவர்களை தடுக்கும் விதமாக காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நேற்று (பிப்ரவரி 10) நடத்திய சோதனையில் 150 மது பாட்டில்கள், 4 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. டிரைவர், ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தகுதி போதுமானது. பணியாளர்களுக்கு ரூ.21,700 – ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். உடற்தகுதி, திறன், எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை செய்து தேர்வு செய்யப்படுவார்கள். <
Sorry, no posts matched your criteria.