India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும்.<
வேலூர் வசந்தபுரம் பர்மா காலனி பகுதியை சேர்ந்த சவுமியா (25) இவர் அதே பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மூர்த்தி (58) மதுபோதையில் சௌமியாவிடம் தகராறில் ஈடுபட்டு கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சவுமியா வேலூர் தெற்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து மூர்த்தியை கைது செய்தனர்.
வேலூர் கோட்டை மைதானத்தில் ‘இலக்கு 2026’ என்ற தலைப்பில் அதிமுகவின் இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை மாநாடு நடைபெற்று வருகிறது. இதில், பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி, தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும் என்றார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான வெற்றிக் கூட்டணி அமையும். 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி வாகை சூடும் எனத் தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் துணை ராணுவத்தின் ஒரு பிரிவான மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) கீழ் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். டிரைவர் மற்றும் பம்ப ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தகுதி போதுமானது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். வரும் மார்ச் 4ஆம் தேதிக்குள்<
முன்னாள் படைவீரர்களின் நலனுக்கான முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின்கீழ் பயன்பெறுவதற்கு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள காயிதே மில்லத் கூட்டரங்கில் வருகிற பிப்ரவரி 20-ம் தேதி மாலை 3 மணியளவில் முகாம் நடைபெறவுள்ளது. எனவே இதில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
காட்பாடி பாரதிநகர் சேர்ந்த காமேஷ் (21) சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். படித்து முடித்துள்ளார். கல்லூரி படித்த போது ஒரு பெண்ணுடன் காதலித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு இருவரும் பிரிந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காதலர் தினத்தன்று காமேஷ் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காட்பாடி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர், காட்பாடி, குடியாத்தம் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று பிப்ரவரி 15 இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியாகி உள்ளது. இதில், ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் தொடர்பு எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
காட்பாடி தாலுகா வள்ளிமலை கிரிவல பாதையில் புதிதாக கட்டப்பட்டுள்ள முனீஸ்வரன் கோவில் பகுதியில் சினிமா படப்பிடிப்பு நேற்று நடந்தது. இதில் வில்லன் நடிகரான மொட்டை ராஜேந்திரன், காமெடி நடிகரான முத்துக்காளை உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்ட காட்சிகள் படம் பிடித்தனர். சினிமா படப்பிடிப்பு நடைபெறுவதை அறிந்த கிராம பொதுமக்கள் ஏராளமானோர் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு ஆர்வமுடன் சென்று பார்த்தனர்.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். வேலூர் மாவட்டத்தில் மட்டும் 29 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <
வேலூர் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் கடத்துபவர் மற்றும் விற்பவர்களை தடுக்கும் விதமாக காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (பிப்ரவரி 13) நடத்திய சோதனையில் 563 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 4 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.