Vellore

News April 5, 2025

வேலூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

image

வேலூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்தில் நடைபெற்று வரும் குடிநீர், சாலை, கழிவுநீர் கால்வாய், புதை சாக்கடை திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் முதலாவது மண்டல அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது ஆட்சியர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் புதை சாக்கடை, சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளாா்.

News April 5, 2025

வேலூரில் சேல்ஸ் மேன் வேலை

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள யுரேகா ஃபோர்ப்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் சேல்ஸ் மேன் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளன. 8, 10, 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆண், பெண் இருபாலரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். 20- 35 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். சம்பளம் ரூ.15,000 வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் 30ஆம் தேதிக்குள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். முதல்முறையாக வேலை தேடுபவர்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

News April 5, 2025

குவாரி குத்தகை உரிமம் பெற விண்ணப்பம்

image

வேலூர் மாவட்டத்தில் சாதாரண கற்கள், கிரானைட் மற்றும் இதர சிறு கனிமங்களின் குவாரி குத்தகை உரிமங்கள் ஆன்லைன் முறையில் வழங்குவதற்கான நடைமுறை வரும் 21ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது. எனவே, குவாரி குத்தகை உரிமம் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள், புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் இணையதளமான https://www.mimas.tn.gov.inஇல் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 5, 2025

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஒருவர் கைது

image

காட்பாடியைச் சேர்ந்தவர் ஜாகீர்(50), கூலித் தொழிலாளியான இவர், 4ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமியை அழைத்து சென்று நேற்று (ஏப்ரல் 4) பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்றுள்ளார். அப்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீசாரை அழைத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காட்பாடி போலீசார், சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஜாகீரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

News April 5, 2025

நாட்டுக்காக இன்னுயிர் நீத்த வேலூர் இளைஞர்கள்

image

ராணுவப் பணிக்கு தங்களை அதிக அளவில் ஈடுபத்திக் கொண்டு, வீரதீரத்துடன் ஆத்மார்ந்த சேவை செய்பவர்களை அதிகமாகக் கொண்டு, தேசத்தில் மற்ற மாவட்டங்களை மிஞ்சும் வகையில் உள்ளது வேலூர். வேலூர் லாங்கு பஜார் மணிக்கூண்டு கட்டடத்தில் உள்ள கல்வெட்டில் “இந்த ஊரிலிருந்து 1914-18இல் நடந்த முதலாம் உலகப் போரில் 277 ஆண்கள் பங்கேற்று, அவர்களில் 14 பேர் தங்கள் இன்னுயிரை நீத்தனர்” என்ற வரிகள் ஆங்கிலத்தில் இருக்கும்.

News April 5, 2025

ராமேஸ்வரத்திற்கு விரைந்த வேலூர் போலீசார்

image

ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில்வே பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி வருகிற 6-ம் தேதி வருகிறார். எனவே பிரதமர் வருகையொட்டி பாதுகாப்பு பணிக்காக வேலூரில் இருந்து 30 போலீசார் மற்றும் வேலூர் வெடி குண்டு தடுப்பு பிரிவு போலீசார் 5 பேர் என மொத்தம் 35 பேர் 2 குழுக்களாக ராமேஸ்வரம் புறப்பட்டு சென்றனர். அவர்கள் அங்கு 3 நாள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என எஸ்பி மதிவாணன் தெரிவித்துள்ளார்.

News April 4, 2025

வேலூர் மாவட்டத்தில் 2 பிடிஓக்கள் பணியிட மாற்றம்

image

வேலூர் மாவட்டத்தில் 2 பிடிஓக்கள் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம்-1 பிடிஓ கார்த்திகேயன், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் பிடிஓ(வஊ) ஆகவும் அங்கு பணியில் இருந்த அமுதவல்லி மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டம்-1 பிடிஓவாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

News April 4, 2025

வேலூர் மக்களுக்கு தெரிய வேண்டிய எண்கள்

image

வேலூர் மாவட்ட ஆட்சியரகம்- 0416-2252501, பேரிடர் கால உதவி-1077, காவல் கட்டுப்பாட்டு அறை-100, வாட்ஸ் அப் எண்- 9092700100, தீத்தடுப்பு- 101, அவசர கால ஊர்தி உதவி- 102, விபத்துக்கால உதவி- 108, குழந்தைகள் உதவி- 1098, பாலியல் வன்கொடுமை தடுப்பு- 1091, பி.எஸ்.என்.எல் உதவி-1500, மாநில கட்டுப்பாட்டு அறை- 1070. *மிக முக்கிய எண்களான இவற்றை உங்களுக்கு தெரிந்த பெண்கள், பெற்றோர் உள்ளிட்ட அனைவருக்கும் பகிரவும்.

News April 4, 2025

வேலூர் மாவட்ட சாய் பாபா கோயில்களில் சிறப்பு பூஜைகள்

image

வேலூர் மாவட்டத்தின் பள்ளிகொண்டா மற்றும் அரியூர் பகுதிகளில் உள்ள சாய் பாபா கோயில்களில் சிறப்பு பூஜைகள் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கூடிச் சாய் பாபாவிற்கு அன்னதானம், தீபாராதனை, சங்காபிஷேகம் உள்ளிட்ட பூஜைகளை நடத்தினர். ஹோமங்கள் மற்றும் விசேஷ ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்களின் இறை பக்தி மற்றும் ஆன்மீக உற்சாகம் கோயில்களை மறுவாழ்வூட்டியது.

News April 4, 2025

குடியாத்தத்தில் ஏப்.11ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

image

குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் வரும் ஏப்.11ஆம் தேதி அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. சிவில், மின்னணு, தகவல் தொழில்நுட்பம், வெல்டர், ஃபிட்டர், பிளம்பர் உள்ளிட்ட துறைகளில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். வேலைவாய்ப்பற்றவர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!