India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு நடத்தும் 3ஆம் ஆண்டு மாபெரும் காய்கறி மற்றும் கிழங்கு திருவிழா 2025 இன்று 23 பிப்ரவரி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி மாலை 4.00 மணி ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. 800க்கு மேற்பட்ட மரபு காய்கறி மற்றும் கிழங்கு வகைகளின் கண்காட்சியில் இடம்பெற்றன.
இந்திய ரயில்வேயில் உள்ள குரூப்: D பிரிவில் மொத்தமுள்ள 32,438 காலிப்பணியிடங்கள் நிரப்பப்ட உள்ளன. 10 மற்றும் ITI முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பாக தென்னக ரயில்வே கோட்டத்தில் மட்டும் 2,694 பணியிடங்கள் உள்ளன. வயது 18-36க்குள் இருக்க வேண்டும். தொடக்கத்தில் 18,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் மார்ச்.1க்குள் இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க
வேலூர் மாவட்டத்தில் 22 மையங்களில் திறனறிவு தேர்வை 5,089 மாணவ- மாணவிகள் எழுதினர். இத்தேர்வு எழுத 5 ஆயிரத்து 234 மாணவ – மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். அதில் 5 ஆயிரத்து 89 பேர் தேர்வு எழுதினர். 145 மாணவ- மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை.இந்த தேர்வின் மூலம் தகுதி பெறும் மாணவ- மாணவிகளுக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையில் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்பட உள்ளது.
வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (பிப்.22) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
வேலூர் CMC CITU ஆட்டோ ஸ்டாண்ட் தொழிலாளி R.நாகராஜ் ஆட்டோவில் பயணித்த மிசோரம் பெண் நோயாளி ATM கார்டு பணப் பையை தவற விட்டு சென்றார். இதை பார்த்த அந்த தொழிலாளி CITU ஆட்டோ சங்க தோழர்களுக்கு தகவல் தெரிவிக்க ஆட்டோ சங்க , மாவட்ட தலைவர் மற்றும் தோழர்கள் உடனடியாக தலையிட்டு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து அந்த மிசோரம் பெண்ணை கண்டுபிடித்து ஒப்படைத்தனர் ATM கார்டு பணப்பையை ஒப்படைத்தனர்.
இந்திய கடலோரக் காவல்படையில் 300 நவிக் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10, பிளஸ் 2 முடித்த இளைஞர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 22க்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக 21,700-47,600 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் https://joinindiancoastguard.cdac.in/cgept/ என்ற இணையத்தில் வரும் பிப்.25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
வேலூர் மாவட்டத்தில் 26 புதிய மினி பேருந்து வழித்தடங்கள் கண்டறியப்பட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்க விரும்புவோர் வருகிற மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி நேற்று (பிப்ரவரி 21) தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப்.28) ஆட்சியர் அலுவலகத்தில் 5ஆவது மாடியில் நடைபெற உள்ளது. வேலூர் மாவட்ட விவசாயிகள் பங்கேற்று பொது பிரச்னைகளை, கோரிக்கை மூலமாகவும், தனி நபர் பிரச்னைகளை மனுக்கள் மூலமாகவும் தெரிவிக்கலாம். இந்த குறைதீர்வு கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்வார்கள்.
வேலுார் அருகே, காட்பாடி பகுதியை சேர்ந்த முத்துசாமி நேற்று முன்தினம் மாலை, தன் வீட்டில் ஒரு சமையல் காஸ் சிலிண்டரில் இருந்து, மற்றொரு சிலிண்டருக்கு காஸ் மாற்றும் பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராதவிதமாக சிலிண்டரில் தீப்பிடித்தது.இதில், முத்துசாமி உடல் மீது தீ மளமளவென பரவியது.தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் தீயை அணைத்தனர்.பின்னர் முத்துசாமியை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மத்திய அரசின் கட்டாய இந்தி திணிப்புக்கு எதிராக திமுக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டங்களும், கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக நேற்று (பிப்ரவரி 21) வேலூர் காட்பாடியில் உள்ள எம்.பி கதிர் ஆனந்த் வீட்டின் முன்பு ‘இந்தி திணிப்பை ஏற்க மாட்டோம்’ என்றும் தமிழ் வாழ்க என எழுதப்பட்டு இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.