India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 10) முதல் வரும் 14ஆம் தேதி வரை வடமாவட்டங்களில் 40°C முதல் 42°C வரை வெப்பத்தின் தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, வேலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளை தவிர்த்து வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
வேலூர் மாவட்டத்தில் முக்கிய நகரங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் இரவு நேர ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. பொது மக்கள் மற்றும் இரவு நேரங்களில் வேலைக்கு செல்வோர் இரவு நேரத்தில் சந்திக்கும் பிரச்சினை தொடர்பாக கொடுக்கப்பட்ட எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் செங்காநத்தம் மலையில் காலபைரவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு 10 கைகளுடன் 3 1/2 அடி உயரத்தில் பைரவர் அருள்பாலிக்கிறார். மிகவும் சக்திவாய்ந்த இந்த கோவிலில் அஷ்டமி நாளில் வழிபட்டால் திருமண தடை நீங்கும் மற்றும் குழந்தை வரம் கிடைக்கும். மேலும், 108 ஒரு ரூபாய் நாணயத்தால் அபிஷேகம் செய்தால் பணக்கஷ்டம் மற்றும் இழந்த செல்வத்தை மீட்கலாம் என்பது ஐதீகம். *கடனில் சிக்கியவர்களுக்கு பகிரவும்*
வேலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஹோட்டல்களில் உள்ள மதுபான பார்களுக்கு வரும் ஏப்.10 அன்று மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் மது பானங்கள் விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சுப்புலட்சுமி இன்று தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையம் சார்பில், வரும் 11ஆம் தேதி குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், 100க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
வேலூர் அரசு உதவி பெறும் (ஊரிஸ்) தனியார் கல்லூரியில், பெண் விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான புகாரில், தனியார் கல்லூரி துணை முதல்வர் அன்பழகன் நேற்று (ஏப்ரல் 8) கைது செய்யப்பட்டார். வேலூர் மகளிர் காவல் நிலையத்தில் பெண் விரிவுரையாளர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தலைமறைவாக இருந்த அவர், ஆந்திராவில் கைது செய்யப்பட்டார்.
வேலூர் ஊரீசு கல்லூரியில் துணை முதல்வராக பணியாற்றி வருபவர் அன்பழகன். இவர் அதே கல்லூரியில் பணியாற்றும் பெண் கௌரவ விரிவுரையாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த மார்ச் 18-ம் தேதி 7 பிரிவுகளின் கீழ் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 8) ஆந்திராவில் பதுங்கி இருந்த கல்லூரி துணை முதல்வர் அன்பழகனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் வருகிற ஏப்ரல் 12-ம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், புதிய குடும்ப அட்டைக்கு மனு செய்தல், கைப்பேசி எண் பதிவு செய்தல் ஆகியவைகள் மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு அம்பேத்கர் கலப்பு திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற, தம்பதியில் ஒருவர் SC/ST வகுப்பைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் BC/MBC வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். தம்பதிகளின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். <
இந்திய ராணுவத்தால் நடத்தப்பட உள்ள அக்னிவீர் தேர்வில், வேலூர் மாவட்ட இளைஞர்கள் கலந்து கொள்வதற்கு வரும் 10ஆம் தேதிக்குள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 18 முதல் 21 வரை ஆகும். கல்வித்தகுதி 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி, ITI, டிப்ளமோ தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.