India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் திருக்கோயில் சிரசு ஊர்வல திருவிழா, வருகிற (மே 14) செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வேலூர் மாவட்டம் முழுவதும் மே 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (மே 9) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநில சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வரும் 13ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி பாதுகாப்பு பணியில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 31 போலீசார், 57 ஊர்க்காவல் படை வீரர்கள் என்று மொத்தம் 88 பேர் ஈடுபட உள்ளனர். அவர்கள் நாளை (வெள்ளிக்கிழமை) வேலூரில் இருந்து புறப்பட்டு ஆந்திரா செல்கின்றனர். தேர்தல் பணி முடிந்த பின்னர் 14ஆம் தேதி வேலூருக்கு வர உள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் இடையன்சாத்து பகுதியில் பென்னாத்தூர் விஏஓ காசி நேற்று (மே 8) மணல் கடத்தலை தடுக்க வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கனரக லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் மணல் இருந்தது. அதற்கான ஆவணங்கள் இல்லை. இதையடுத்து 3 யூனிட் மணலுடன் லாரியை பறிமுதல் செய்து பாகாயம் போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் காசி ஒப்படைத்தார். டிரைவர் சீனிவாசன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக 100 டிகிரி க்கும் மேல் வெயில் கொளுத்தி வந்தது. இந்நிலையில் அணைக்கட்டு வட்டம், ஒடுக்கத்தூர் அடுத்த மேல் அரசம்பட்டு பகுதியில் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் இன்று (மே 8) அதிகாலை பெய்த கனமழையில் முறிந்து விழுந்தது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர்.
வேலூர் மாவட்டம் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது அண்ணன் மு.க அழகிரியின் மகனை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 8) மாலை வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறையினர் செய்து வருகின்றனர்.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் வார்ட்டில் ஏராளமான குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வார்டில் ஒரு தொலைகாட்சி இருந்தால் குழந்தைகளுக்கு உதவியாக இருக்கும் என்று மருத்துவர்கள் வைத்த கோரிக்கையின் மூலம் சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் சார்பாக LED TV இலவசமாக இன்று வழங்கபட்டது. இதனை மருத்துவமனை டீன் Dr.திரு.ராஜவேல் , குழந்தைகள் பிரிவு தலைமை மருத்துவர்கள் பெற்று கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் இன்று (மே.08) மதியம் 1 மணி வரை இடியுடன்கூடிய, லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆந்திராவில் மே 13 மக்களை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால் தமிழ்நாடு -ஆந்திர மாநில எல்லை பகுதியான குடியாத்தம், மோர்தானா, காட்பாடி எருக்கம்பட்டு, பொன்னை, சேர்க்காடு ஆகிய 5 டாஸ்மாக் கடைகளுக்கு மே மாதம் 11ம் தேதி முதல் 13-ம் தேதி வரை 3 நாட்களுக்கு மதுபான கடைக்கள் இயங்காது என கலெக்டர் சுப்புலட்சுமி இன்று உத்தரவிட்டார். விதிமீறி விற்பனை செய்தால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளார்.
12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிகழ்வில் சிறந்த கல்வியாளர்கள் கலந்துகொண்டு 12ம் வகுப்பிற்கு பிறகு உயர்கல்வியியல், கலை அறிவியல், பொறியியல், அறிவியல் தொழில்நுட்ப பிரிவுகள் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பது தொடர்பாக விரிவான தகவல்களை மாணவ, மாணவியருக்கு வழங்க உள்ளனர். அதன்படி, வேலூரில் மே 13ம் தேதி இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடு நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 முதல் 40 கிமீ வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதன்படி வேலூர் உட்பட 12 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.