India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கு மேல் இருக்க கூடாது. வருமான சான்று, ரேஷன் கார்டு, அடையாள சான்று, முகவரி சான்று, ஆதார் கார்டு ஆகிய ஆவணங்களின் நகல்கள் உடன் இந்த <
முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (<
வேலுரைச் சேர்ந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. தோழி, 2 ஆண் நண்பர்களுடன் சென்னையில் உள்ள லாட்ஜில் மது அருந்தியபோது, மது போதையால் மயக்கத்தில் இருந்த அப்பெண்ணிடம் ஆண் நண்பர்களில் ஒருவர் இவ்வாறு செய்துள்ளார். கண் விழித்து பார்த்தபோது அப்பெண் ஆடை இல்லாமலும், பிறப்பு உறுப்பில் காயத்துடனும் இருந்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் தோழி, ஆண் நண்பரை கைது செய்தனர்.
வேலூர் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன் (25) கூலித்தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த யூசுப்கான்(23), இவரது அண்ணன் ஆசிப்(25) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு ஞானசேகரனை வழிமறித்து சகோதரர்கள் இருவரும் ஞானசேகரனை தாக்கியுள்ளனர். இதுகுறித்து ஞானசேகரன் அளித்த புகாரின் பேரில் நேற்று (ஜூலை 6) வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஜூலை 6) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 100 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இது தொடர்பாக 4 பேர் மீது மதுவிலக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம்,பேரணாம்பட்டு,கே வி.குப்பம்,அணைக்கட்டு மற்றும் திருவலம் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று ( ஜூலை- 06) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
வேலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (ஜூலை 6) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
வேலூர் நெல்வாய் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மேஸ்திரி. இவரது மகன் தனசேகரன்(15) தனது பிறந்த நாளை முன்னிட்டு நண்பர்களுக்கு சாக்லெட் வாங்கித்தர ஆயிரம் ரூபாய் வேண்டும் என பெற்றோரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் கூலி வரவில்லை வந்ததும் தருகிறோம் என்று கூறியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த தனசேகரன் நேற்றிரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வேலூரில் கடந்த 2020 ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஜூன் 30 தேதி வரையிலான காலாண்டில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தற்போது 5 ஆண்டுகள் முடிவு பெற்றுள்ளவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் அல்லது<
வேலூர் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 8 கோடியே 50 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 1,335 புகார்கள் வந்துள்ளது. மோசடி நபர்கள் பயன்படுத்திய வங்கி கணக்கை முடக்கம் செய்து, 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரம் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக்கு வரவு வைப்பதற்கான பணி நடந்து வருகிறது. சைபர் குற்றங்களில் ஈடுபட்டதாக 6 பேரை கைது செய்துள்ளோம். என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.