India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேட்டூர் செக்கானூர் கதவணை நீர் மின்நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நேற்று (மே 26) முதல் ஜூன் 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பராமரிப்புப் பணிகள் நடப்பதால் வேலூர் மாவட்டதில் 10 நாட்கள் குடிநீரை முழுமையாக வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, பராமரிப்பு பணி நடைபெறும் நாட்களில் குடிநீரை சேமித்து, சிக்கனமாக பயன்படுத்தும்படி மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
ஆந்திராவை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நேற்று (மே 26) வேலூர் அருகே உள்ள கோயிலுக்கு செல்வதற்காக காரில் 6 பேர் வந்துள்ளனர். கார் வேலூர் கலெக்டர் அலுவலக மேம்பாலம் கடந்து சர்வீஸ் சாலைக்கு அருகே வந்தபோது திடீரென பக்கவாட்டில் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது கார் மோதி உள்ளது. இதில் காரில் வந்த 2 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் அண்ணா சாலையில் உள்ள ஏலகிரி அரங்கத்தில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் 13வது கோட்ட மாநாடு மற்றும் கோட்ட செயலாளர் முனிரத்தினம், கோட்ட உதவியாளர் கோவிந்தராஜ் ஆகியோரின் பணி நிறைவு பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கோட்டத் தலைவர் செல்வகுமார், கோட்டச் செயல் தலைவர் சேகர், கோட்ட பொறியாளர் கபாலி முனிரத்தினம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக்கரை பகுதியில் கோபி என்பவருக்குச் சொந்தமான குடியிருப்பு வீட்டில் இன்று (மே 26) புகுந்துள்ளது. இன்று அதிர்ச்சியடைந்த கோபி உடனடியாக குடியாத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பேரணாம்பட்டு எருக்கம்பட்டு வனப்பகுதியில் இருந்து வழி தவறி மான் ஒன்று நேற்று வந்துள்ளது. மானை அங்கிருந்த நாய்கள் விரட்டி சென்று கடித்துள்ளது. இதை அவ்வழியாக சென்ற ஆட்டோ டிரைவர் வினோத் என்பவர் மானை மீட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் காயமடைந்த மானுக்கு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மான் இறந்தது.
வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் மக்களவை தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலட்சுமி நேற்று (மே.25) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டம், வேலப்பாடி பகுதியில் உள்ள ஸ்ரீ பெருமாள் சுவாமி கோவிலில் இன்று சனிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஸ்ரீ பெருமாள் சுவாமிக்கு மலர் அலங்காரம் மற்றும் சிறப்பு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர். பின்னர் பக்தர்கள் கோயில் அமர்ந்து தியானம் மேற்கொண்டனர்.
காட்பாடியை சேர்ந்தவர் கதிர்வேல் (54). இவர் பேத்தி நேற்று (மே 24) வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் (30) என்பவரது நாய் சிறுமியை கடித்துள்ளது. இதுகுறித்து கதிர்வேல் ஸ்டீபனிடம் தட்டி கேட்டார். இதில் ஆத்திரமடைந்த ஸ்டீபன் கதிர்வேலை தாக்கியுள்ளார். இதுகுறித்து கதிர்வேல் காட்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் ஸ்டீபனை கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வேலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தை மாவட்டத் தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலெட்சுமி தினமும் ஆய்வுசெய்து வருகிறார். அந்த வகையில் நேற்று (மே 24) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
குடியாத்தம் கவுண்டன்யா மகாநதியில் இருந்து மணல் கடத்தப்படுவதாக டவுன் போலீசாருக்கு நேற்று (மே 24) ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அவ்வழியாக பைக்கில் மணல் கடத்தி வந்த அதேபகுதியை சேர்ந்த கிருபாகரன் (20) என்பவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய பைக் மற்றும் மணல் மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.